ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இருப்பதை மட்டும் உணர்கிறேன்

அங்கும் இங்கும் என்று
நகம் கடித்து கொண்டு
உன் வருகைக்காக காத்து
இருந்தேன் .....................
கடந்து செல்லும் நினைவலைகளுடன்
கடக்க முயலும் உன் புன்முறுவலுடன்
இறுதி வரை நீ வரவில்லை
முகில்களுடன் தேடினேன்,நீ
இருப்பதை மட்டும் உணர்கிறேன்
அமாவாசை என்று உணராமல்............

சனி, 10 செப்டம்பர், 2011

சிறகு

தவழும் மனதிற்கு பறக்க
சிறகாய் நீ வலம் வந்தாய்
எட்டி பிடிக்க நான் கற்றேன்
நீயோ உயர பறந்தாய் 
மீண்டும் பிடிக்க நான் குதித்தேன்
நின்று கொண்டு, நீ சிரிப்புடனே
மீண்டும் பறந்தாய் உயரமாக 
முடிவில் நான் கற்றேன் 
பிடிக்க முடியாதது உன்னையல்ல 
என் மனதை என்று..............................


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பாதச்சுவடுகளுடன்

நானும் தேடிச் சென்றேன்
நினைவிருக்கும் வரை ,
மறை முகம் காட்டும்
பிறை நிலவின் ஒளியில்,
பாதச் சுவடுகள் வழிகொண்டு
கடற்கரை சாலையில் ,
வண்ணத்தின் கலவைகள்
ஒருங்கிணைந்த அலையோசை
நீக்கமற நிறைந்திருக்கும் இருள் வெளியில்
நான் மட்டும் பயணிக்கிறேன் விடியலை
நோக்கி தனியாக, பாதச்சுவடுகளுடன்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

என்னிடம் இல்லை ஒரு தேசிய கீதம்

இயற்றுவதற்கு என்னிடம் இல்லை
ஒரு தேசிய கீதம் இந்த சுதந்திரத்திற்க்கு
ஒவ்வொரு பொழுதையும் அடிமையாய்
கழிக்கும் இந்த பாரத நாட்டில்
சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க நானும்
விழைகிறேன் தேசியக் கொடியுடன்

சனி, 6 ஆகஸ்ட், 2011

பரிதிக்கு வணக்கம்


புன்னகையின் புன்முறுவலாய் 
நவரசத்தின் அங்கமாய் 
நயமுடன் உன் முகம்   
இக்காலை பொழுதில் 
நானும் மலர்ந்தேன் உன்னுடன் 


                                                          பரிதிக்கு வணக்கம்