ஞாயிறு, 31 ஜூலை, 2011

பொழிவி (கவிதை)

தவழும் முகிலின் விளையாட்டு
பாசத்துடன் வருடும் பனிமலர்
முகத்தில் ஆலத்தின் முத்தங்கள் 
பவனத்தின் ஆனந்தத் தழுவல்கள்
என்னுள்ளும் கண்டேன் நான்
புவி மகவின் மாஇன்பத்தை
சாலையில் நனைந்துகொண்டு
உன் வரவை இரசித்துக்கொண்டு




சனி, 30 ஜூலை, 2011

இரவு (கவிதை )

மெல்ல மெல்ல எட்டி பார்க்கும் உன் கருவிழியில்
வண்ணச் சிதறல்களாய் மயக்கும் தாரகங்கள்
நடுவே வெண் மதியின் சுழல் நடனம்
உள்ளத்தை களவு கொள்ளும் தென்றலின் சுவரங்கள்
இவற்றில் மெய் மறந்து துயிலுகிறேன்
இப் பாரின் அன்பான அரவணைப்பில் இன்பமாக 

செவ்வாய், 26 ஜூலை, 2011

வருவாயா நீ (கவிதை )


தேடினேன் நான் கவியமுதை
இன்று வரை முகமறியவில்லை  
தேடலுக்கு வழி பிறக்கவும் இல்லை 
வானழகின் உச்சம்மாய் மேகத்தின் 
மென் வண்ணமாய் பொழியும் உன்
ஆகாய பூ மழை வரவை காண 
காத்திருக்கிறேன் வருவாயா நீ 

திங்கள், 18 ஜூலை, 2011

இப்படிக்கு உதிர்ந்த மலர் (கவிதை)

இதன் தொடர்ச்சி நானில்லை 
ஆனால் எனக்கும் இதில் பங்குண்டு
என்னாலும் முடியவில்லை இதை 
நிறைவேற்ற என் செய்வேன் நான்
 உனக்கு இங்கு இவ்வுலகில் 

                                                    இப்படிக்கு உதிர்ந்த மலர் 
                                                                               (உதிராத மனதுடன் )

வெள்ளி, 15 ஜூலை, 2011

ஓ இதைத்தான் சொன்னார்களா (கவிதை)

உனக்கென இந்த இடம்
நான் மட்டும் தனியாக
இது என்ன விசித்திரம்
உன்னுள் ஓ இதைத்தான்
சொன்னார்களா காதலென்று

வியாழன், 14 ஜூலை, 2011

எனக்கும் இது புதுசுதான்

எனக்கும் இது புதுசுதான் என்ன
செய்ய ஆனாலும் சொல்வேன்
இதை கவிதையென்று உன்
கபடமில்லா குழந்தை சிரிப்புக்காக


செவ்வாய், 12 ஜூலை, 2011

சிறைக் கைதியாக

தனியே வரும் தனிமை தன்மையாக
இருப்பதில்லை தண்ணீரின் தாண்டவமாய்
நெருப்பின் கபளீகரமாய் ,காற்றின்
அழைக்களிப்பாய் வந்து தடம்
இன்றி தனியாய் என்னை மட்டும்
இல்லாமல் சிக்க வைக்கிறாய்
உன்னையும் என்னுடன் என்
மன சிறைக் கைதியாக


திங்கள், 11 ஜூலை, 2011

உனக்கு இந்த வரிகள் அதிகம்தான் என்ன செய்ய (கவிதை)

ஆனாலும்  உனக்கு இந்த வரிகள்
அதிகம்தான்  என்ன செய்ய 
எனக்கு தெரியவில்லை நாளை 
நான் சொல்கிறேன் உனக்கு 
நீ மட்டும்தான்  அழகு  என்று  





சனி, 9 ஜூலை, 2011

அ காவியம் (காதல் கவிதை)





நினைவிருக்கிறது எனக்கு 
நானும் நீயும் மட்டும் போய்
வந்து கொண்டிருந்த காலம்

வெள்ளி, 8 ஜூலை, 2011

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டனா (25 + )

                                                             

 இந்த மூஞ்சிக்கு இது வேற கேக்குதா நானும் பாக்கறேன் சும்மா அந்தர்கா பல்டி கும்னாகா கிம்டி னு தாங்கல ச்செ என்ன கருமாந்தர பொழப்பு இது இவன இன்னும் காணமே 

புதன், 6 ஜூலை, 2011

பிரபல பதிவன்னா நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடாக்காராடா



பதிவர் 1:100 பேர் பாத்த பதிவுன்னா

பதிவர் 2:அது ஹிட் பதிவு

பதிவர் 1:10,000 பாத்த பதிவுன்னா

பதிவர் 2:அது பிட்டு பதிவு

செவ்வாய், 5 ஜூலை, 2011

பதிவர்கள் அனைவரும் கவனிக்க (உள்ள வராதீங்கோ) அந்த + பதிவு



பலரும் பதிவுகளில் அருமையான படங்கள் தொகுப்பை வெளியிடுவதில்லை
படங்கள் பல தனியாக வரிசைபாடுத்தப்படுவதால் ரசிக்கும் படியான படங்களும் பயனற்ற நிலையை அடைகின்றன

குழந்தங்க குசும்பு (18+ only)



ஹிஹி நீங்கல்லாம் எங்களபாத்து எங்கள 
பாத்து கத்துகுங்க 
நாங்கல்லாம் பிஞ்சிலேயே பழுத்தவங்க

திங்கள், 4 ஜூலை, 2011

தேடித் தேடி (கவிதை)

தேடித் தேடி பார்த்தேன் உன்னை இந்த
 கண்ணாடி முன்னால் நான் நின்று
கண்ணாமூச்சி விளையாட்டு போதும்

சனி, 2 ஜூலை, 2011

யாராவது உதவுங்கள் பதிவர்களே

1.என்னுடைய follower list காணாமல் போய் விட்டது எப்படி இழந்த நன்பர்களை மீட்பது எப்படி தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து கூறுங்கள் நன்பர்களே


நன்பர்கள் (கவிதை)

வெடக்த்துடன் மறையும் பகலவனின்


வருகைக்கும் விட்டுச் சென்ற சந்தோசத்தின் 

வெள்ளி, 1 ஜூலை, 2011