புதன், 29 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா இந்த டிஸ்கி தொல்ல தப்பே இல்ல

ஒன்னும் இல்ல சும்மா இத படிங்க 

 டிஸ்கி : மேலே ஒன்றும் இல்லேனு நெனக்காதீங்க இனி கீலேயும் ஒன்னும் இருக்காது எதுக்கும் பாருங்க.

கவுண்டமணி vs செந்தில் ஒரு கலக்கல் ரீ என்ரன்ஸ்





கவுண்டமணி : ஏண்டா கொப்பரங்கா தலையா நம்ம இல்லாம இந்த சினிமா ஃபில்டு எப்படி போகுது


செந்தில் : இன்னோ அந்த வாழப்பழ கதயவே பேசீட்டு இருக்குண்ணே




கவுண்டமணி : சரி அந்த வாழபழத்த என்னடா பன்ன டங்குவாரு மண்டயா
செந்தில் : அட மக்கு அண்ணே அத நீங்கதானே சாப்டீங்க (ஹிஹி இவன இன்னைக்கு விட கூடாது )




கவுண்டமணி : டேய் என்ன வச்சு நீ காமெடி கீமெடி பண்லயே
செந்தில் :  என்ன அண்ணே வடிவேலுவா மாறீடீங்க


கவுண்டமணி : ஆமா பன்னுவாயா அந்த வடிவேலுபய புள்ள அட்ரசயே காணோம் என்றா ஆச்சு






கவுண்டமணி : டேய் கறுவாட்டு தலையா உன்னத்தாண்டா கேக்கறேன் 
 செந்தில் : சொல்லுங்கணே சொல்லுங்க


கவுண்டமணி : ஏண்டா நா என்ன பழைய டேப்ரெக்காடரா திரும்ப திரும்ப கத்தரக்கு எட்டி மிதிச்சன்னா சட்னி ஆயிருவ ராஸ்கல்


செந்தில் : அவரு அடிதாங்காம அரசியல்ல இருந்து அப்பீட்டாயிட்டாரு அண்ணே
கவுண்டமணி : அதென்றா அடிவாங்காம அரசியலல ரைமிங்கா ஏண்டா 
ஏனக்கேவா அரை டவுசர் மவனே உனகெதுக்குடா இந்த ரைமிங்க்


செந்தில் :  ஆமா நாங்க கொஞ்சம் அழகா பேசுனா உங்களுக்கு வயிறு எரியுமே
கவுண்டமணி : டேய் மொள்ளபன்றி கழுதக்கு பேச்ச பாரு இ.நா சப தலவரு மாரி உனக்கு ஏதுக்குட இந்த அழகெல்லாம்






செந்தில் :  அண்ணே இது நல்லா இலல ஆமா
கவுண்டமணி : ஆமா நீ நல்லாத்தான் இல்ல குளிச்ச்சு எத்தண நாள்ரா ஆச்சு
ரம்ப மண்டயா கப்பு தாங்கல 


செந்தில் : அண்ணே இது ரெம்ப ஒவரா போகுது 
கவுண்டமணி :ஏண்டா அரவேக்காடு மவனே இங்க என்ன கிரிக்கெட்டா நடக்குது ஒவர் ஓவர்ங்கற




செந்தில் :  (இவன விட்டா பேசியே சாடிகறானே ஒரு வழி பண்ணூவோம்)
செந்தில் : அண்ணே அண்ணே ஒரு டவுட்டு




கவுண்டமணி : உனக்கெலா டவுட்டா கேளு
செந்தில் :  நீங்க வச்சுசுருந்தீங்களே அந்த செவப்பு காரு அந்த காரு
கவுண்டமணி : ஏண்டா உனக்கு வேனுமா
செந்தில் :  இல்ல அந்த காருவச்சிருந்த சொப்பனசுந்தரிய யாருவச்சுருக்கானு..........






கவுண்டமணி : ஐய்யோ இங்க வந்தும் என்ன சாகடிகறானே..........உன்ன .........



செவ்வாய், 28 ஜூன், 2011

ஒரு மேட்டர் (ஒரு ஜொள்ளு ஒரு ஜில்லு)

ஆமா இஙக் பதிவு எங்க இருக்கு இத நீங்க கேட்டீங்கனா ஹிஹி நீ வலையுலகத்துக்கு லாய்க்கிலை என்னாடா அது புட்ஜீ டிரீண்டா ம்ம் அத நா சொல்ல மாட்டேன் ஏன்னா எனக்கே தெரியாது


சரி இந்த பன்சி மேட்டர் என்ன ஆச்சு திகிடுனு திருப்பமாச்சு அத ஏன் கேக்கற யாருக்கு புட்டுகுச்சுனு தெரியலப்பா கடை ஒரே புலம்பல் பின்ன அடுத்த ஃபிகர் புடுச்சுட்டாருடா.... சீ அது இல்ல இது ரகசியம்


சரி மேட்டர் என்ன அத சொல்லு அட ஆசயப்பாரு இந்த மேட்டர் எனக்கே தெரியாதப்ப என்ன சொல்றது இந்த பீரு மேட்டரு கானாம போச்சே இந்த கூத்த நீ கேட்டீயா


அந்த சரக்க நா எதுக்குடா கேட்கனும் என்னடா சொல்ல வர இப்ப சரி விடு அந்த பீரு இப்ப என்ன புலம்புதோ நம்க்கென்ன


ஆமா இந்த பீஸா மேட்டர் கேட்டியா கட தொரந்தா நம்ம ரொட்டி விக்காதுனு ஒறே அலப்பறையாம் அங்க என்ன ரொட்டி கட்டீங்கற மேட்டர சொல்றா


அட தலப்ப பாத்ததூம் உன் மரம்ண்டக்கு ஏறலையா ஒரு மேட்டர் னு 
அத சொல்லு மொதல்ல டும்கி பயபுள்ள


இன்னுமா புரியல 100 வது பதிவ போட்ருக்கேன் இப்ப கொஞ்ச பயங்கரமா
இருக்கட்டுமேனு ஹிஹி அட்டு மொக்கயா போட்டுக்கேன் 100வதுல்ல 
தூஊஊஊஊஊஉக்கலாஆஆ இருக்கட்டுமேனுதான்


சரி அதுக்குனு யாரும் தடி எடுக்காதீங்க உங்க தலைல நீங்களே அடுச்சுக்காதீங்க வலையலகுல சாரி வலையுலகுல இதல்லாம் சகஜம் வரட்டுமா வந்துட்டேன் 


இந்த மாரியும் கொடுமையா பதிவு போடுவம்ல 


                                                                               இப்படிக்கு


                         ரூம் போட்டு யோசிச்சு சாகடிப்போர் சங்கம் 

                                                       


குறிப்பு : ஒரு மேட்டர் (ஒரு ஜொள்ளு ஒரு ஜில்லு) பதிவு பேரப்பாத்து ஏமந்திருந்தா, கமெண்டல குமிறிட்டு போறாவுங்களுக்கு ஜில்லுனு ஒருமேட்டர் (மொக்க பதிவு)இலவசமா வழங்கப்படும் ஓகே ரெடி 
கொஞ்சம் கதறீட்டு போங்க பீளீஸ்















காதல் கவிதை (பாகம் 9)

நீ வருவாய் என காத்திருந்து
என் கல்லறை கூட கண்ணீர்வடித்தது
முடிவில் நீ வந்தாய் மணக்கோலத்தில்
எனக்கு அஞ்சலி செலுத்த, மலர்வளையத்தை
விட்டுச்சென்றாய் நீ நம் காதலுடன் சேர்த்து,
இபோது மலர்வளையமும் துடிக்கிறது
இருதலைகொள்ளியாய் உன் நினைவுகளுடன்


திங்கள், 27 ஜூன், 2011

அ (கவிதை)

அகிலமெனும் ஆரத்தில் ஆற்றல்
அறிய அவா, ஆனால் அகத்துள்
அளவிட அறியும் அகழவாய்வு
ஆதியும் அந்தமும் அறியவிலா
அணுக்கோடி அனுபவத்தை அளிக்க
அளிக்க அதத்துடனே அறுதியானது
அவ் அறிவெனும் அமைவத்தில்



ஞாயிறு, 26 ஜூன், 2011

வாழ்கை (கவிதை)

வாழ்கை போரட்டத்தில் ஜெயித்தவனின்
பிதற்றல் கூட வேதவாக்கு இல்லயென்றால்
உண்மை நன்னெறி கூட பிதற்றல் இங்கு
வெல்வது என்பதே வாழ்கையென்றால்
வாழ்வென்பது கூட கேலிக்கூத்தா
இல்லையேல் அது ஒரு எடுப்பார்
கைபிள்ளையா ம்,என்னவென்பது
கேள்விகள் உள்ளன விடை இல்லாமல்



தேடினேன் தேடல்களை (கவிதை)

எதையோ சொல்ல வந்தேன்
எதையோ எதையோ சொல்கிறேன்
சிந்தையால் சிந்தை கடினமானது
தேடல்கள் என்னை அலைக்கழித்தன
தேடினேன் தேடல்களை, தேடுவதற்கே
தேடல்கள் தேவைப்பட்டன இறுதியில்
என் தேடல் ஏன் தேடல் என்றானன
தேடல் தேடும்வரை சுகம் ஆனன
தேடாவிட்டாலும் சுபம் ஆனன




சனி, 25 ஜூன், 2011

எங்கே போவேன் (கவிதை)

கடந்து வந்த நினைவலைகள்
கவலையின்றி சொன்னது
நீ என்னை மறந்தாய் என்று
நினைவுக்கு எங்கே போவேன்
வலைவிரித்து பிடிக்க ஐயோ
இந்த சிந்தனை கடலில்


ஐயோ இந்த கொடுமைய கேளுங்க நடுநிலையாளர்களே

இந்த சாரு,தமிழ் பொன்னு மேட்டர் கேட்டு கேட்டு கடுப்பாகுது

ரெண்டு பேரும் அவுங்க அவுங்க தேவைக்காக பயன்படுத்தி பேசிக்கிட்டு கடசீல மாறி மாறி பழி போட்ட்டுக்கறாங்க இந்த பொழப்புக்கு ரெண்டு பேரும் சாகலாம்

எனக்கு என்ன வருத்தம்னா தொப்பி தொப்பி அவர்களும்,தமிழச்சி அவர்களும் அவர்களுக்கு ஆதரவா பேசறது என்ன செய்ய ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஆதரவா இருக்கறதா நெனச்சு அந்த ரெண்டு அயோக்ய ஜந்துகளுக்காக பலியாரது கவலையா இருக்கு

தொப்பி தொப்பி ,தமிழச்சி ரெண்டு பேருக்கும் இப்படி ஆணையும்,பெண்ணையும் காக்கறதா நினச்சு அந்த ஜ்ந்துக சாரு,தம்ழ் பொன்னு ரெண்டு பேரையும் காப்பாத்தாதீங்க

அப்படி செஞ்சா நல்லவங்கள(ஆணையும்,பெண்ணையும் )
கேவலப்படுத்தரதா ஆயிடும் புரிஞ்சுக்கோங்க வருத்தத்துடன் நடுநிலையாய் இருக்க விரும்புபவர்களில் ஒருவன்



வெள்ளி, 24 ஜூன், 2011

இரவின் இலட்சியம் (கவிதை)

உள்ளம் உறங்கும் நேரம் 
வந்து விட்டது இதோ
கனவுகள் கானும் களம்
கிடைத்துவிட்டது இதோ
துன்பங்கள் மறையும் பொழுது
வந்துவிட்டது இதோ இங்கு
கண்கள் பனிக்கின்றன இமைகள்
தேடுகின்றன உறக்கத்தினை
நளைய இலட்சியம் பிராகாசிக்க



வியாழன், 23 ஜூன், 2011

கற்றுக்கொண்டிருப்பவன் (கவிதை)

கருத்துகளில் இனிமை
எழுத்துக்களில் வளமை
தேடுதலில் புலமை
கற்றுக்கொள்வதில் பொறுமை
எடுத்துரைப்பதில் வலிமை
தட்டிக்கொடுப்பதில் மென்மை
பாராட்டுவதில் வள்ளல்தன்மை
கண்டிப்பதில் நடு நிலைமை
வழிகாட்டுவதில் அனுபவத்தன்மை


இவையணைத்தையும் நான்
கண்டேன் என் சான்றோர்களிடம்
 (இயற்கையின் கொடைகளிடம்)


                                                                இப்படிக்கு


                                                       கற்றுக்கொண்டிருப்பவன்


புதன், 22 ஜூன், 2011

இனிய இரவுப் பயணம் (கவிதை)

இனிய இரவுப் பயணம்
விடியலை நோக்கி விழிப்பாய்
முழுப்பொழுது வந்தது
பகலவன் விடைபெற்றது
மதி அழகுடன் வரவேற்றது
பணிவிடைகள் அரங்கேறியது
கண்களுக்கு நட்சத்ர விருந்து
பிரியாவிடை காண,காட்சி
அரங்கேறியது கனவில்
இனிய பயணமாக



களவு (காதல் கவிதை)



இப்போதுதான் தெரிந்தது களவு
உண்மைதான் களவு போய்விட்டது
திருட்டு விழிகளை நான் கண்டேன்
அது அங்கும் இங்கும் அலைந்தது
என்னை பார்த்து சிரித்தது கபடமில்லாமல்
எனக்கு கோபம் வரவில்லை ஆச்சரியம்
திருட்டு ஆனால் கபடமில்லா சிரிப்பு
என்ன இது புது உலக சரித்திரம்
ஆனால் நான் எதையும் இழக்கவில்லை
அப்படியானால் களவு நடந்ததே
என் மனதுக்கு இன்னமும் புரியவில்லை
எப்படி புரியும் அவள் திருடியது என் மனதை
வைத்து சென்று விட்டால் அவள் மனதை
ஒரு களவு தேவதையாய் என் துடிப்பை இரசிக்க




செவ்வாய், 21 ஜூன், 2011

இரவு (ஹைகூ கவிதை)



இனிமையாய் மலரும் ஒரு 
கவிதையிரவு நான் செல்கிறேன்
அதை இரசிக்க தூக்கத்தில் கனவாக







ஒரு கிறுக்கல்கள் (ஹைகு கவிதைகள்)

காத்திருத்தல் என்பதும் கூட காத்திருக்கறது
வெற்றியே நீ வருவாய் என்பதனால்

******
சுற்றும் முற்றும் புல்வெளி அலைகழிக்கிறது
என்னை உன் விரலசைவின் நடன முறையில்


******

வான்வெளி யெங்கும் கண்டேன் உன்னை
அட என்ன வெட்கம் நான் பொய் சொல்கிறேன்


******


நீயும் என்னை கோபிக்கிறாய் ஆம் அதுதான்
அந்த மனம் திருடும் திருட்டு கணகளால் 


******

பலவற்றில் ஒன்றிணைகிறோம் என்பதல்ல காதல்
சிலவற்றில் கூட பிரிவினை இல்லை என்பதே காதல்


******

நானும் நீயும் பயணிப்பது எதனால்
காதல் என்னும் பயணத்தில்


******

வரும் காற்று வருடுவதில்லை 
வாழ்வு என்றும் வாழாதபோது


******

நமக்கு வேண்டும் இந்த பணிகள்
நாளை பிறப்போம் என்ற உண்மையில்


******

கையில் இருப்பது ஒன்றும் இல்லை அடடா
விரல்களின் பயன்களை அறியா மனிதன்


******

வெற்றியின் தேகத்தில் உள்ளது கண்டேன்
தோல்வியின் வீரத் தழும்புகள் வரலாறாய்


******

அவனுக்கு கிடைத்த்து அதிஷ்டம் இதுதான்
உழைப்பின் தன்னம்பிக்கை அளித்த மா மகுடம்


******

எனக்கு மட்டும் ஏன் துன்பம் மனிதனின் 
சாபக்கேடு சிந்திக்கும் ஆறாம் அறிவு


******

கிடைப்பன எல்லாம் அவன் செயல்
அய்யோ இழப்பன இழப்பின் செயல்


******

எனக்கும் புரியவில்லை என் எழுத்து
எனக்கு புரியும் என் எழுத்து எழுதும்போது

******


வலிய வந்தால் வலியுடன் வருவது
வலிமையுடன் வந்தால் வன்மத்துடன் 
வாழ்வது வலிமையே வலியுடையது


******

கற்கும் கல்வி கடமையாக கனிந்தால்
கரம் கடந்து கலகம் கரையும்


******
பால் வென்மை பசுவின் மென்மை
வாழ்க்கையோ என்றும் பசுமை


******

கிறுக்கத் துணிந்த மனிதனின் ஓவியம் 
இன்று காலத்தின் வானவில்லாய்





******


இல்பை இயக்குதல் இணக்கதின்
இடைமறிப்பு இயல்பின் இயக்கத்தில்


******


எண்ணிக்கை எண்ணத்தின் எண்கள்
எண்ணும் என்னமும் என் ணென்பதால்


******














திங்கள், 20 ஜூன், 2011

ந (கவிதை)

நயமுடன் நாவி நகைபோல்
நன்கைந்து நமதே வென
நாளைய நாவிதழ் என்றுண்டோ
நகைப்பா நல்கி யதென்று




நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல(old)


அடேய் உங்கள.....................................
இப்டி வித்யாசமா ஆரம்பிக்கறேனு வரது
சரி தொலையரானுக-னு நினைச்சா விட மாட்டானுக 


ஆருயிர் தென்றல் ,ஆப்பா கந்தல் இப்டி புகழரதா நம்ள பதில் கமண்ட் போட வச்சே சாகடிக்கறது இதுல இவனுக எழுதன பதிவ வேற போட்டு சாகடிகறது


பேரப் பாத்தா   நண்டுக்கு தெரியுமா வண்டு , நா பொடறது பூண்டு இப்டி தலைப்பு இருக்கு சரி-னு போய் பாத்தா 


நாலும் ஒரு தலைப்பு நாலுகாலுக்கு கருப்பு ,அங்க பாரு பருப்பு ஆனா இங்க வெறுப்பு இப்டி தலைப்பும் புரியாது உள்ள இருக்க மேட்டட்ரு அது ஹைய்யோ எங்க போய் முட்ரது 


இவனுகதான் இப்டீனு நினச்சா அவனுகளுக்கு வர கமண்டு  பதிவுலகமே கலங்கி போராளவுக்கு மொக்க சிகர சிகாமணி குரூப் அப்டீனு லிஸ்டே 
அங்க இருக்கும் 


அப்டி என்ன இருக்குன்னா 


பயபுள்ள அங்க சீரியசா வெங்காயம் உரிப்பது எப்டினு அழ்துட்டே பதிவ போட்ற்றுப்பான்


அதுக்கு ஹிஹி இப்டி கம்ண்டு 


இவ எதுக்கு ஹிஹி சொல்றா அவனுக்கே தெரியாது


இப்டி இன்னோருத்த கமண்டு அப்றொம் அதுக்கு
 பதில் கமண்டு வேற இப்டி வரும் 


அட அது பதிவருக்கே தெரியாது கேட்டு சொல்றேன் அப்டி-னு பதில்


எனக்கு மொதல்ல புரியல அப்றதா தெரிஞ்சுது கம்ண்ட காப்பி பேஸ்ட்
பண்ணீருக்குது அந்த பக்கி பய புள்ள


அடேய் மொக்க கண்டு கூட சொந்தமா வராதானு கேட்டா


அதுக்கு 


  மொக்க கமண்டு கூட்டமா வரும்
  காப்பி கமண்டு சிங்களா வரும்


                                                        இப்படிக்கு 


                         காப்பியடித்து கமண்ட் காலியாக்கும் சங்கம்


        இப்டி இவனுக கமண்ட் தொல்ல தாங்க முடியல சாமி


கைல மட்டும் இவனுக கிடைசா ..........(மொக்க கமண்டலேயே கரச்சுருவேன் அவனுகள) ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே.............................














   


  




சனி, 18 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

மொக்க மொக்க இப்டி ரம்பமாட்ட அறுக்கறது அறுக்கறத படிக்கிறது அதுக்கு மொக்க பதிவு ,கருத்துனு சொல்லி ராவரது கடசீல



     மொக்க யென்பார் மொக்கபோடுவார் அஃதிலார்
     மொக்கயே எனப் படுவார்

                                                                           மொக்குறள்-1597


     மொக்கயா தெனப்படுவ சிறப்பு அச்சிறப்பு
     மா மொக்க தன்றோ
  
                                                                           மொக்குறள்-3784


இப்டி தேடி தேடி மொக்க போடரது போதும்டா சாமியோ அப்டீனு நினைச்சா

                  மொக்கயே
                  மொக்கங்குதே
                  அடடே
                  ஆச்சர்யக்குறி
                                       
                                                அப்டிங்கறது


                 மொக்க தேடி ஊரூராய் அலைந்தேன்
                 ஒரு மொக்கயுடன் என்னே வியப்பு!

                                இப்டி நம்ள சிரிக்க வைக்கறேனு சாவடிக்கறது



இதவிட்டா பாட்டு எழுதறேனு பாடி கொல்றது இல்ல எதாவது கிரகத்த கிறுக்கறது 


அப்றம் நல்லா பதிவு இருந்தா மொதோ கட பஜ்ஜி சொஜ்ஜி,மட சொட னு கமென்டு அப்றோம் (அட டீ கட வச்சிருந்தா அத கவனிங்கப்பா நாலு காசு வரும்)அத போடாதேனு கமென்டு இவனுக மொக்கய கேட்டா படிக்கல படிச்சுட்டுவந்து அதே கருமத்த லேடஸ்ட் மொக்கனு திரும்ப போடறது


                                                                                                                  முடியலப்பா சாமி


இதவிட பெரிய கொடும என்னானா யாரையாவது உரண்ட இழுக்கறது அப்றம்
அவனோட சேர்ந்து மொக்கயாயாயாயாயாயாயாயாயா போட்டு தள்றது

இதவிட நம்ள வாழவு விடாம சாகவு விடாம இப்டி பதிவ முடிக்றது

        நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

                                                                                                                              இப்படிக்கு,


               மொக்க போட்டு மொக்க ஆக்குவோர் சங்கம்
                                                                                                         
                                                                                                           அப்டிங்கறது                                                                                               


                    அடிங்க...........அவனுக மட்டும் கைல கிடச்சா........... (மொக்க போட்டே கொல்லுவேன்)ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே...............................






குறிப்பு : சும்மா தாமாசு சீரியஸ் ஆகாதீங்கோகோகோகோகோ

                                                                 


                 
                                     
               


     




வெள்ளி, 17 ஜூன், 2011

அ (கவிதை)

அகமெனும் அற்றில் அறத்தின்
அறவழி ஆக்கமதல் அணித்தன்
அதனூடே அமைவா தன்னிலை
அவம் அமைந்து விடானிலை
அமைத் துவது அ, அசை தெரிவு

ஹைகு கவிதை (பாகம் 3)



பிளாஸ்டிக்கை ஒழிபோம் ஊர்வலம்
கைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்


ஊழலை ஒழிப்போம் மேடைப்பேச்சு
பார்வையாளர்களுக்கு பண பட்டுவாடா


மரங்களை காப்போம் விழிப்புணர்வு செய்திகள்
பிரசுரங்கள் அனைத்தும் மரப்பலகைகளில்


முப்பத்திமூன்று சதம் இட ஒதிக்கீடு
கட்டாய குழந்தை திருமணம்


தெய்வகுத்தம் கருவறைக்கு போகக்கூடாது
இருட்டறையில் பாலியல் லீலைகள்


அழகிய அரிய வனஉயிரின கண்காட்சி
ஓவியங்களில் மட்டும் உயிராய் இருக்கிறது


இந்தியாவின் பலம் இளைஞர்கள்
வேலையில்லா திண்டாட்டம்


என்றும் நாங்கள போரிட மாட்டோம்
அணு ஆயுத பதுக்கல்கள்






















வியாழன், 16 ஜூன், 2011

அப்பாவை நினைத்து பெருமை படுகிறேன் (கவிதை)

நின்றால் திட்டு,நடந்தால் திட்டு
வேலையில் தவறென்றால் அங்கும் திட்டு
எப்பொழுதும் அறிவுரை எத்ற்கும் அறிவுரை
வார்த்தைகளின் மென்மை அறிந்தது
இல்லை நான் அவரிடம் அன்பான
கலந்துரையாடல் இல்லை அவரிடம்
நினைக்க நினைக்க வெறுப்பு
ஏன் இவர் இப்படி இருக்கிறார்
கூர்ந்து கவனித்தேன் நான்
முகத்தில் கடுமை மனத்துள் மென்மை
புறத்தில் கோபம் அகத்தில் அன்பு
வெளிப்புறம் கண்டிப்பு உட்புறம் வருத்தம்
அனைதையும் கொண்டு வெளியில் காட்டாமல்
தன் பிள்ளையின் வெற்றியை பார்த்து
அதில் தன் பங்கில்லை என்று ஒரு
மூன்றாம் மனிதராய் ,ஓரமாய் நின்று
அணு அணுவாய் ரசிக்கும் அப்பாவை
நினைத்து பெருமை படுகிறேன்











நிஜம் (ஹைகு கதை)

நிஜத்தை தேடும் போது மட்டுமே சுடுகிறது
உண்மை என்றும் கசக்கும் என்று ஆனால்
நிஜத்தில் உண்மை கசபப்தில்லை பொய்யான
இனிப்பெனும் முட்டாள் வாழ்வில் நாம்
விரும்பி பயணிப்பதால் ஏற்படும் கசப்பு இது


புதன், 15 ஜூன், 2011

கதை (கவிதை)

கவனத்தில் மறத்துவிட்டேன்
எழுத்துப்பிழையை கவிதை
கதை ஆனது,கதை எழுத
நினைத்தேன் எழுத்துக்கள்
அனைத்தும் கவி ஆனன
தை மட்டும் அழிவதில்லை
என்றும் கவிதை கவி யாவதால்



முழுமதி காண்பேன் கவிதை

முழுமதி காண்பேன் இன்று உன்னுடன் 
நிலவொளி காணும் முழுநிலவொளி 
அந்நிலவொளி முகமலர் வருகை 
வெட்கத்தில் முழுமையாய் உன்னை 
கரைபாய் பின் உன்னை நினைத்து 
ஏங்கும் போது மெதுவாய் நீ 
மீண்டும் வருவாய் என்னுடன் விளையாட 
உனக்காக நான் காத்திருப்பேன் இரவுவரை 
இந்த அழகிய  விளையாட்டை இரசிக்க 

குறிப்பு :(இன்று முழு சந்திர கிரகணம்)



செவ்வாய், 14 ஜூன், 2011

மனம் கவிதை

தனிமையை விரும்பிய மனதை
தனிமையாகவே ஆக்கியது கணினியுகத்தில்
விரும்பியன எல்லாம் கிடைத்தன
ஆனால் அணைத்தும் எந்திர இயக்கங்களாய்
உயிருள்ள மனதை உயிருக்குயிராய்
நேசிக்க துடிக்கிறது மனம் ஆனால்
அணைத்தும் உருமாறின உயிருள்ள
இயந்திர மனங்களாய்

ஜன்னலோரக் கவிதை

அழகாய் இரண்டு சிறிய கதவுகள்
அவளின் சிரிக்கும் கண்கள் போல்
அதில் இருக்கும் வண்ண ஓவியங்கள்
அவள் விழி ஆடும் அழகு நடனம் போல்
ஒன்றாய் பார்த்தால் அவள் மலர்முகம்
தனியாய் பார்த்தால் அவள் வெட்கம்
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
ஜன்னல் திறந்து தென்றல் வந்தது
ஆனாசயமாய் தாவி என் மார்பில் விழுந்தாள்
கன்னத்தில் வருடி மெய் மறந்தாள்
ஆம் அவள்தான் என் பூனைக்குட்டி
என்றும் அவள் என் செல்லக்குட்டி


திங்கள், 13 ஜூன், 2011

கவி (கவிதை)

கவியின்ப கனையென்ப மாதகு
மெய்யின்ப வழி நோக் கிலா
அக்த்துளா தவன் அற்றலா
தவப்பய னுடைதம் அரிகண்டு
போற் றவை சிறப்பு







குருவி இசை (கவிதை)

அழாகாய் குருவி இசைக்கிறது
காணக் குயிலிசைக்கு நிகராய்
காகம் மெய் மறந்து இரசிக்கிறது
குருவியின் இசை மழை எங்கும் ஒலிக்கிறது
முதன் முதலாய் கேட்கும் புது இசை
தொடருமா இந் நகரத்தில் புதிய இசை
(குருவிகளை காப்போம்)

குறிப்பு :  எனது நகரத்தில் நேற்று நடந்த அருமை நிகழ்வு இது
நேற்று போல் இன்றில்லை வருத்தமே



ஞாயிறு, 12 ஜூன், 2011

வ (கவிதை)

வலமிசை வளம், வனம் வரும்
வாரம் அது வரம்,வாகை சூட
வருமுன் வகை வகை வலைச்சரம்
வருவதா வரவேற்பதா வருகையால்
வளர்வலம் வருவதா வருதிசை
வராமல் விடு உம்மை விடு



ஞாயிறு இனியது

வழமை போல் பகலவன் வருகை
ஆனாலும் இன்று உற்சாக எதிபார்ப்பு
விடிய விடிய கேளிக்கை சற்றுஒய்வு
 பின்பு பகலவனுடன் சேர்ந்து நம்
 உலகம் சுவாசிக்க சுற்றுவது
 தென்றலைப்போல் இங்கும் அங்கும் 
சென்று விளையாட்டாய் ரசிப்பது
 நன்பகளுடன் சேர்ந்து இவ்வுலகை மறப்பது
 காதலி வந்தால் நன்பர்களையே மறப்பது
ஆம் என்றும் இனியது இந்த ஞாயிறு 
என்றும் இனியது இந்த ஞாயிறு 


சனி, 11 ஜூன், 2011

வடிவேலு ரிட்டன்ஸ் (வரும் ஆனா வராது)

என்றுமே காமெடி பீசாகி பீஸ்கர் அவார்டு வாங்கிய அரசியலால் பீஸ் போன பல்பாய் ஆன வடிவேலுவின் பேட்டி இதை படித்து நீங்கள் பீஸ் போன பல்பாய் ஆனால் நீங்களே ப(பொ)ருப்பு (வடை,சாம்பார் செய்ய)

எழுதவே தெரியாத பதிவர் பதிவுமணி :  நீங்க பேட்டி குடுக்க காரணம் என்ன?


வடிவேலு :  அந்த டும்கி பய கிருபாதா எழுத்துரு-னு பிளாக்ல மொக்க போடரானுல அவந்தான்
                        


எ.தெ.ப.மணி:என்ன நடந்துச்சு?


வடிவேலு :  என்ன காலாய்கறனு மொக்கயா போட்டுது கடசீல காட்டுவாசி படம் போட்டுது அத பாத்த நான் நல்லாருக்குனு கேப்டன் தொல்லயால   காட்டுக்கு போனேன்..................
அங்க அந்த பக்கிக எப்படிதான் கண்டானுக நாம பீஸ் போன பல்புனு என் ஒத்த கால விழுதுல கட்டி தூரி ஆடிடானுக பக்கிக  பெண்டு கழண்டு போச்சு


எ.தெ.ப.மணி:  எப்டி தப்சீங்க....


வடிவேலு :  எங்க விட்டானுக, கரடி வத்ததால ஓடிட்டானுக


எ.தெ.ப.மணி:  அப்ரோம்?


வடிவேலு :  அந்த கரடி பக்கி என்ன மரத்துல கட்டி மூஞ்சி முன்னாடியே குசு விட்டுசு கருமம் எனனத்த தின்னுச்சோ.........அப்றந்தான் தெரிஞ்சுது   பிளான் பன்னி பன்னிருக்குனு


எ.தெ.ப.மணி: என்னது பன்னியும் குசு விட்டுச்சா? அது எப்ப வந்துச்சு?


வடிவேலு :  யோவ் திட்டம் போட்டு செஞ்சுதுனு சொன்னயா...


எ.தெ.ப.மணி:  அதான் அந்த பன்னியு தானே திட்டம் போட்டுச்சு


வடிவேலு :  இப்பவே கண்ண கட்டுதே அந்த கரடியே தேவல போலருக்கே


எ.தெ.ப.மணி:  சரி சரி விஸயத்துக்கு வாங்க


வடிவேலு :  யோவ் நா என்ன சரித்திர கதையா சொல்றேன் நான் அடி வாங்கருதுல அவ்வளவு ஆச நன்னாரி பயலே ஆமா இந்த பேட்டி எப்ப உங்க பத்திரிக்கையில வரும்?


எ.தெ.ப.மணி:பத்திரிகையா அப்டினா?


வடிவேலு :   நீ பனிமணி பத்திரிக்கை-ல இருந்துதான் வர?


எ.தெ.ப.மணி:   இல்ல நான் பிளாக் எழுதீட்டு இருக்கேன்


வடிவேலு :   மறுபடியும் பிளாக்கா (மயக்கமாகிறார்)


எ.தெ.ப.மணி:   ஐயோ அதுக்குள்ள பீஸ் போய்டாரே?


குறிப்பு : வடிவேலு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் பேட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதற்குள் பதிவர்கள் தங்கள் பல்பு   கேள்விகளை பின்னூட்டமிடலாம் நீங்கள் பீஸ் போகாமல் இருந்தால்



எ.தெ.ப.மணி:பேட்டி தொடரும்...........................(வரும் ஆனா வராது).....................


கடவுளறிவியல் 2 (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)


குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல்
இருந்தால் மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்

         புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
         புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
         நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
         ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்


 நாம் நமக்குள்ளே எழுப்பும் கேள்வி மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களிடம் இருந்து முரண்பட்டு வாழ்கிறான். தவறு செய்கிறான் (அ) பாவம் செய்கிறான் ஆனால் இன்றுவரை அழிவு மனிதனுக்கு வரவில்லை எனும் போது ஆத்திகத்தில் கடவுள் காப்பார் என்றும்,நாத்திகத்தில் அறிவியல் வழியிலும் விளக்கம் கொடுத்தாலும் முழுவதுமாக இரண்டிலும் தீர்வு இல்லை எனவே விவாதம் பிறக்கிறது

இங்கு என்ன செய்வது ஒன்றும் இல்லை இப்படி பார்ப்போம் நம் கூட இருப்பவர் தனியாக பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம் கேட்டால் அவர் தன் நண்பனிடம் பேசுவதாகவும் அவருடன் உணவருந்துகிறார் , தூங்குகிறார் என்றும் சொன்னால் அதையும் தாண்டி இதோ உங்களிடமும் பேசுகிறார் வணக்கம் சொல்லுங்கள் என்றால் ஆத்திகன்,நாத்திகன் என்று யாராக இருந்தாலும் அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று விலகி ஓடுவோம்

ஆனால் இதயே மதம்,கடவுள்,நாத்திகம் என்று சொன்னால் ஒரு கூட்டம் கூடி விவாதம் அல்லதுசண்டை ஆரம்பிக்கிறோம் மேலே சொன்னது போல இங்கேயும் அதேகூத்துதான் நடக்கிறதுஆனால் அப்படியே தலைகீழாக நடக்கிறது.இதற்கு விடை நாம் நம் படிப்பை,அனுபவத்தை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இவற்றிற்கு சரி. மதம்,கடவுள்,நாத்திகம் இவற்றை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இல்லையென்றால் அவர்களை வேற்றுகிரக ஜந்துக்களை போல் பார்ப்பது
எதற்கு இந்த முட்டாள்தனம்

தனது சுயலாபத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் மனிதனின் அறிவின்மையையே காட்டுகிறது.எந்த பிரச்சனை என்றாலும் மதம்,கடவுள்,நாத்திகம் இதனுள் கொண்டு வருவது.

நமக்கு சளி பிடிக்கிறது இதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை இதே சளி உயிரை கொல்கிறது என்றால் இங்கே ஆத்திகம்,நாத்திகம் உருவாகும் .ஒரு கிறுமி தன் வாழ்வாதாரதிறக்காக நம்மை கொல்கிறது இதில் என்ன ஆத்திகம்,
நாத்திகம் பேசுவது வேடிக்கையாக உள்ளது


 பிளாக் மாரியம்மன் கோவில் அடடே அப்படியென்றால் பிளேக் கிருமிக்கு வேலை இல்லையா பிளாக் கிருமிக்கு  எங்கே போவது. நான் நாத்திகன் கோவிலுக்குள் போகமாட்டேன் என்பது கடவுள் இல்லையாம் பின்ன என்ன கோவிலுக்குள் போக வேண்டியதுதானே
(சிலர் நாத்திகவாதிகள் என்று இப்படி செய்வதை நான் பார்திருக்கிறேன்) அவர்களை என்ன சொல்வது நாத்திகம் மதம் அல்ல ஒரு விழிபுணர்வு ஆயதமே புரிந்து கொள்ளுங்கள்....

உண்மையை தேடாமல் இப்படி தனக்குள் ஒரு வட்டம் போட்டு ஆத்திகம்,நாத்திகம்
பேசுபவர்களை என்ன செய்வது?????????????????????

உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................





வெள்ளி, 10 ஜூன், 2011

வரம்

ஒருவன் வரம் பெற தவம் செய்தான் பல வருடங்களுக்கு பிறகு இறைவன் வந்தார்.வரம் கேட்டான் பறவைப்போல் பறக்க இறக்கையை, இறைவன் வரம் கொடுத்துவிட்டு மறைந்தார்.அவன் மலை உச்சியில் இருந்து குதித்து பறந்தான் ஆனால் பறக்க முடியாமல் கீழே விழுந்து அடிபட்டு வலியில் கடவுளை திட்டினான்.அபோது கடவுள் தோன்றி நீ பறக்க இறக்கை மட்டுமே கேட்டாய் பறக்கும் வலிமையை அல்ல, ஆற்றல் அனைத்தும் உன்னுள்ளேயே உள்ளது இதை நீ நம்பினால் நீ இறக்கை இல்லாமல் கூட பறக்கலாம் எதையும் சாதிக்கலாம் இல்லையேன்றால் நான் இருந்தாலும்,வரம் தந்தாலும் பயன் இல்லை என்று கூறி மறைந்தார்.


குறிப்பு: படித்தது+கற்பனை கொஞ்சம்


வண்ணத்துப் பூச்சி



வண்ணமயமாய் வானம் மாறும்


வண்ணங்களாய் என் மனமும் மாறும்


வகை வகையாய் புது முயற்ச்சி


பட்டங்களாய் நான் காணும் காட்சி


ஒன்றினையும் பின்னல்கள் ஒன்றாய்


இணையும் சூட்சமங்களின் அழகு


இவையனத்தும் நான் கண்டேன்


இந்த அழகுப்பறவைகளிடம்








வியாழன், 9 ஜூன், 2011

கடவுளறிவியல் (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)


குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல் இருந்தால்   மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்
   
        புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
        புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
        நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
       ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்

இங்கு இருக்கும் கடவுளறிவியல் பற்றி அனைவரும் விவாதிக்கிறார்கள் ஆனால் எதற்க்கா எவை பயன்டுகின்றன,எதற்கு எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதன் உட்கருத்தை யாரும் சொல்வதே இல்லை இதுவே பிரச்சனையின் முதல் படி....

சரி பதிவர்கள் அனைவரும் எதொ ஒரு பக்கம் இருக்கும் குறையை மட்டும் சொல்கிறார்கள் அது எதனால் என எதார்த்ததின் அடிப்படையில் அவைகளை களைந்தால் மட்டுமே கடவுளறிவியல்
பிரச்சனைக்கு ஒரு முடிவை தேடலாம் இல்லையென்றால் மனிதர்களின் நிலை?????????

மக்களின் தன்னபிக்கை இல்லாமையே அதாவது (பயம்+ஆசை) இருப்பது கடவுளறிவியல் பிரச்சனைக்கு காரணம் என மேலோட்டமாக தெரிந்தாலும் முறையான விழிப்புனர்வு இல்லாமையே இதன் காரணம் இன்னும் தெளிவாக கூறினால் மனிதன் மட்டுமே இயற்கையை எதிர்த்து தன்னை அழித்துக் கொண்டு அத்ற்கு வியாக்காணம் கற்பிக்கிறான்........

சரி ஒரு கருத்து உண்மையா?பொய்யா? இரண்டும் இல்லை இடைப்பட்டது என்று மூன்றும் இல்லை என்று கூறுவது மட்டுமே உண்மை இதை உணர்ந்து கொள்வது கடிணமே சரி எப்படி
உணர்வது காற்று நம் கண்களுக்கு சாதரணமாக தெரிவதில்லை ஆனால் அதற்காக காற்றுக்கு நிறம் இல்லை என்று கூறிவிட முடியாது நம் கண்கள் அத்ற்கு ஏற்றவாறு இல்லை என்பதே உண்மை........

சரி காற்றை பார்பது போல் அமைந்தால் மற்றவை இல்லை என்பது போல் அனைத்தும் மறைக்கபடும் இவ்வாறே கடவுளறிவியல் பிரச்சனைக்கும் வருவோம் ஆத்திகம்+நாத்திகம்+அரசியல் வட்டத்தைவிட்டு அல்லது தூக்கி எறிந்து விட்டு இயற்கை அமைத்த வழியில் நம் வாழ்வை தொடர்வோம் இனிமையாக வாழ்வோம்.....


உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................




கூகுள் இசை பக்கம்



  கூகுளின் முகப்பு பக்கம் கிதார் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது அதில் உள்ள கம்பிகளை சுண்டுங்கள் காண இசை மழையை உருவாக்கி மகிழுங்கள்
மீண்டும் சந்திப்போம்.இது லெஸ் பால் என்ற இசையமைபாளருக்காக உருவக்கப்பட்டது மேலும் தகவல் அறிய கிதாரை கிளிக் செய்யவும்


கூகுள் செல்ல இங்கே சுட்டவும்
http://www.google.co.in/

புதன், 8 ஜூன், 2011

உண்மையின் துணைகொண்டு

சிறகுகள் விரித்து பறக்க 
துடிக்கிறேன் பறவை போல்
புல்வெளியைப்போல் அசைந்தாட
நினைக்கிறேன் காற்றின் அரவணைப்பில்
அலைகளைப்போல் வருகிறேன் 
மீண்டும் மீண்டும் உன்னை வருடிச்செல்ல
வேர்களை போல் உறுதியடைகிறேன் 
உன் வெற்றியின் ரகசியம் கண்டு
வழி கண்டு வெற்றி காண வருகிறேன்
பகலவனை சுற்றும் புவியைப்போல்
இன்றல்ல ஒரு நாள் சரணடைவேன்
வெற்றிக்களிப்புடன் உண்மையின் துணைகொண்டு

வருவாய் நீ எனக்காக

இன்று ஒரு நாள் வர காத்து இருந்தேன் 
ஆம் இன்று வர காத்து இருந்தேன் 
விழா காணும் அமைவைரம் நாள்
என்றும் உன் பயணம் புதிய தோற்றம் 
புதிய அனுபவம் புதிய சாகாப்தம் 
ஆருயிர் அன்பு காணும் வாழ்க்கை 
என்றும் இன்று போல் வருவாய் நீ எனக்காக 



செவ்வாய், 7 ஜூன், 2011

ஒரு அரசியல் பதிவு

அரசியல் பதிவு எழுதாலாம் என்று நினைத்தால் என்ன செய்வது வீட்டில் தண்டச்சோறாக இருந்தாலும் பிரச்சணை வேலைக்கு போ என்று அடிக்காத குறையாக துரத்துவதால் பதிவு மற்றும் என்னுடைய மொக்கை கருத்தை போட முடியவில்லை சமீபத்தில் நடப்பன மதம் கடவுள் பற்றி பலர் எழுதி வரும் விமர்சனத்தை அடுத்து எனக்கு இருக்கும் சில(பல) கேள்விகளை இங்கே 
பதிவிட நினைக்கிறேன் இரண்டு நாள் இடைவிட்டு சந்திப்போம் இதுவே என் முதல் அ...ல் பதிவு. பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி சந்திப்போம்.

திங்கள், 6 ஜூன், 2011

புத்துலகு காணுங்கள்




இனி வரவு நீ
இனி செலவு நான்
மையமாய்
என்
மையம்
மாயமாய்
உன்
நிசப்தம்
ஈர்ப்பாய்
உன் வருகை
விலக்கமாய்
என் மனம்
எதிலும்
நீ
அனையாமல்
நான்
  ஒரு நெருப்பாய்
நான்
காற்றாய் நீ
சுடராய் நான்
ஒரு 
அரவனைப்பாய்
நீ
பாவையளனாய்
நீங்கள்
பிறகென்ன
ஒளி
வீசுகிறது
புத்துலகு
காணுங்கள்
மகிழ்ச்சியுடன்