கடவுளறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுளறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூன், 2011

கடவுளறிவியல் 2 (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)


குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல்
இருந்தால் மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்

         புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
         புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
         நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
         ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்


 நாம் நமக்குள்ளே எழுப்பும் கேள்வி மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களிடம் இருந்து முரண்பட்டு வாழ்கிறான். தவறு செய்கிறான் (அ) பாவம் செய்கிறான் ஆனால் இன்றுவரை அழிவு மனிதனுக்கு வரவில்லை எனும் போது ஆத்திகத்தில் கடவுள் காப்பார் என்றும்,நாத்திகத்தில் அறிவியல் வழியிலும் விளக்கம் கொடுத்தாலும் முழுவதுமாக இரண்டிலும் தீர்வு இல்லை எனவே விவாதம் பிறக்கிறது

இங்கு என்ன செய்வது ஒன்றும் இல்லை இப்படி பார்ப்போம் நம் கூட இருப்பவர் தனியாக பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம் கேட்டால் அவர் தன் நண்பனிடம் பேசுவதாகவும் அவருடன் உணவருந்துகிறார் , தூங்குகிறார் என்றும் சொன்னால் அதையும் தாண்டி இதோ உங்களிடமும் பேசுகிறார் வணக்கம் சொல்லுங்கள் என்றால் ஆத்திகன்,நாத்திகன் என்று யாராக இருந்தாலும் அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று விலகி ஓடுவோம்

ஆனால் இதயே மதம்,கடவுள்,நாத்திகம் என்று சொன்னால் ஒரு கூட்டம் கூடி விவாதம் அல்லதுசண்டை ஆரம்பிக்கிறோம் மேலே சொன்னது போல இங்கேயும் அதேகூத்துதான் நடக்கிறதுஆனால் அப்படியே தலைகீழாக நடக்கிறது.இதற்கு விடை நாம் நம் படிப்பை,அனுபவத்தை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இவற்றிற்கு சரி. மதம்,கடவுள்,நாத்திகம் இவற்றை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இல்லையென்றால் அவர்களை வேற்றுகிரக ஜந்துக்களை போல் பார்ப்பது
எதற்கு இந்த முட்டாள்தனம்

தனது சுயலாபத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் மனிதனின் அறிவின்மையையே காட்டுகிறது.எந்த பிரச்சனை என்றாலும் மதம்,கடவுள்,நாத்திகம் இதனுள் கொண்டு வருவது.

நமக்கு சளி பிடிக்கிறது இதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை இதே சளி உயிரை கொல்கிறது என்றால் இங்கே ஆத்திகம்,நாத்திகம் உருவாகும் .ஒரு கிறுமி தன் வாழ்வாதாரதிறக்காக நம்மை கொல்கிறது இதில் என்ன ஆத்திகம்,
நாத்திகம் பேசுவது வேடிக்கையாக உள்ளது


 பிளாக் மாரியம்மன் கோவில் அடடே அப்படியென்றால் பிளேக் கிருமிக்கு வேலை இல்லையா பிளாக் கிருமிக்கு  எங்கே போவது. நான் நாத்திகன் கோவிலுக்குள் போகமாட்டேன் என்பது கடவுள் இல்லையாம் பின்ன என்ன கோவிலுக்குள் போக வேண்டியதுதானே
(சிலர் நாத்திகவாதிகள் என்று இப்படி செய்வதை நான் பார்திருக்கிறேன்) அவர்களை என்ன சொல்வது நாத்திகம் மதம் அல்ல ஒரு விழிபுணர்வு ஆயதமே புரிந்து கொள்ளுங்கள்....

உண்மையை தேடாமல் இப்படி தனக்குள் ஒரு வட்டம் போட்டு ஆத்திகம்,நாத்திகம்
பேசுபவர்களை என்ன செய்வது?????????????????????

உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................





வியாழன், 9 ஜூன், 2011

கடவுளறிவியல் (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)


குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல் இருந்தால்   மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்
   
        புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
        புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
        நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
       ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்

இங்கு இருக்கும் கடவுளறிவியல் பற்றி அனைவரும் விவாதிக்கிறார்கள் ஆனால் எதற்க்கா எவை பயன்டுகின்றன,எதற்கு எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதன் உட்கருத்தை யாரும் சொல்வதே இல்லை இதுவே பிரச்சனையின் முதல் படி....

சரி பதிவர்கள் அனைவரும் எதொ ஒரு பக்கம் இருக்கும் குறையை மட்டும் சொல்கிறார்கள் அது எதனால் என எதார்த்ததின் அடிப்படையில் அவைகளை களைந்தால் மட்டுமே கடவுளறிவியல்
பிரச்சனைக்கு ஒரு முடிவை தேடலாம் இல்லையென்றால் மனிதர்களின் நிலை?????????

மக்களின் தன்னபிக்கை இல்லாமையே அதாவது (பயம்+ஆசை) இருப்பது “கடவுளறிவியல்” பிரச்சனைக்கு காரணம் என மேலோட்டமாக தெரிந்தாலும் முறையான விழிப்புனர்வு இல்லாமையே இதன் காரணம் இன்னும் தெளிவாக கூறினால் மனிதன் மட்டுமே இயற்கையை எதிர்த்து தன்னை அழித்துக் கொண்டு அத்ற்கு வியாக்காணம் கற்பிக்கிறான்........

சரி ஒரு கருத்து உண்மையா?பொய்யா? இரண்டும் இல்லை இடைப்பட்டது என்று மூன்றும் இல்லை என்று கூறுவது மட்டுமே உண்மை “இதை உணர்ந்து கொள்வது கடிணமே” சரி எப்படி
உணர்வது காற்று நம் கண்களுக்கு சாதரணமாக தெரிவதில்லை ஆனால் அதற்காக காற்றுக்கு நிறம் இல்லை என்று கூறிவிட முடியாது நம் கண்கள் அத்ற்கு ஏற்றவாறு இல்லை என்பதே உண்மை........

சரி காற்றை பார்பது போல் அமைந்தால் மற்றவை இல்லை என்பது போல் அனைத்தும் மறைக்கபடும் இவ்வாறே கடவுளறிவியல் பிரச்சனைக்கும் வருவோம் ஆத்திகம்+நாத்திகம்+அரசியல் வட்டத்தைவிட்டு அல்லது தூக்கி எறிந்து விட்டு இயற்கை அமைத்த வழியில் நம் வாழ்வை தொடர்வோம் இனிமையாக வாழ்வோம்.....


உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................