தன்னம்பிக்கை கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜூலை, 2011

சிறைக் கைதியாக

தனியே வரும் தனிமை தன்மையாக
இருப்பதில்லை தண்ணீரின் தாண்டவமாய்
நெருப்பின் கபளீகரமாய் ,காற்றின்
அழைக்களிப்பாய் வந்து தடம்
இன்றி தனியாய் என்னை மட்டும்
இல்லாமல் சிக்க வைக்கிறாய்
உன்னையும் என்னுடன் என்
மன சிறைக் கைதியாக


புதன், 8 ஜூன், 2011

உண்மையின் துணைகொண்டு

சிறகுகள் விரித்து பறக்க 
துடிக்கிறேன் பறவை போல்
புல்வெளியைப்போல் அசைந்தாட
நினைக்கிறேன் காற்றின் அரவணைப்பில்
அலைகளைப்போல் வருகிறேன் 
மீண்டும் மீண்டும் உன்னை வருடிச்செல்ல
வேர்களை போல் உறுதியடைகிறேன் 
உன் வெற்றியின் ரகசியம் கண்டு
வழி கண்டு வெற்றி காண வருகிறேன்
பகலவனை சுற்றும் புவியைப்போல்
இன்றல்ல ஒரு நாள் சரணடைவேன்
வெற்றிக்களிப்புடன் உண்மையின் துணைகொண்டு

வருவாய் நீ எனக்காக

இன்று ஒரு நாள் வர காத்து இருந்தேன் 
ஆம் இன்று வர காத்து இருந்தேன் 
விழா காணும் அமைவைரம் நாள்
என்றும் உன் பயணம் புதிய தோற்றம் 
புதிய அனுபவம் புதிய சாகாப்தம் 
ஆருயிர் அன்பு காணும் வாழ்க்கை 
என்றும் இன்று போல் வருவாய் நீ எனக்காக 



சனி, 4 ஜூன், 2011

இருக்கும் வரை







இருக்கும் வரை இருப்பேன்


இல்லாவிட்டலும் இருப்பேன்


எவற்றையும் கடப்பேன்


எங்கும் நான் செல்வேன்


விரும்பினால் நேசிப்பேன்


இலலை என்றால் சுவாசிப்பேன்


தயக்கத்தை தகர்ப்பேன்


தரணியெங்கும் கொண்டு சேர்ப்பேன்


வானளாவ உயர்வேன் மற்றவர்


உயர என் தோள் கொடுப்பேன்


வாழ்க்கையோடு பயணிப்பேன்


பயணத்தில் நான் பயணியாவேன்


மாற்றங்களுக்கு மாற்றாவேன்


மாற்றமே என் மா உயர்வாவேன்


ஏற்றத்தில் நான் சீரமைப்பேன்


ஏற எங்கும் ஏற்றமாவேன்


என்றும் எதிலும் இருப்பேன்


நான் நானாக, உனக்காக....................


                                            இப்படிக்கு,


                                                      தன்னம்பிக்கை.











புதன், 25 மே, 2011

தலைப்பில்லை





இன்று எனக்கு தலைப்பில்லை!


ஆம் இன்று எனக்கு தலைப்பில்லை!


எழுதுவதற்கு!


எழுத்திற்கு தலைப்பு இல்லை!


இங்கு என் எழுத்திற்கு தலைப்பு இல்லை!???????


எழுதுவத்ற்கு தலைப்பு தேவையில்லை???????!!!!


எனவே நான் தலைப்பிடவில்லை


அதனால்..........................


இன்று எனக்கு தலைப்பில்லை!!!!!






செவ்வாய், 24 மே, 2011

மௌனம்



நான் இருக்கிறேன்


ஆம் நான் இருக்கிறேன்


மௌனம் என்னும் சிறையில்


மாற்றத்தின் மௌன உருவமாய்


இது என் மறுஉருவம், இல்லை இல்லை


என் மீது திணிக்கப்பட்ட உருவம்


வலிய நான் ஏற்க மறுத்தேன்


காரணம் நான் அதை வெல்ல நினைத்தேன்


விதி விளையாட்டுப்பிளை என்னுடன் விளையாடுடினான்


முடிவில் நான் தோற்றேன், வெல்வத்ற்காக


அத்ற்க்காத்தான் இந்த முடிவு


மௌனம்............................

ஞாயிறு, 22 மே, 2011

இனி என்ன எனக்கு துணிந்துவிட்டேன்!





இனி என்ன எனக்கு


துணிந்துவிட்டேன்!


முற்போக்கு சிந்தனை


இடைவிடாத முயற்ச்சி


அயராத விழிப்புணர்ச்சி


மறையாத இலக்கு


உடையாத மணம்


கலங்காத கண்கள்


கரையாத எண்ணகள்


போராட என் கரங்கள்


உதவிக்கு உங்கள் கரங்கள்


இனி என்ன எனக்கு


துணிந்துவிட்டேன்!


வியாழன், 19 மே, 2011

நான் வருவேன்

தோல்விகள் என்னை சூழ்ந்தாலும்

எதிரிகள் என்னை வென்றாலும்

வாழ்கை என்னை துரத்தினாலும்

மீண்டும் நான் வருவேன்,வெற்றிகளை

குவிப்பேன் என் தன்னம்பிக்கை

என்னும் இமாலய துணையுடன்

ஞாயிறு, 15 மே, 2011

நீ எனக்கில்லை





வரும்   நாட்கள் எனக்கில்லை?


பொழுதுகள் விடிவது எனக்கில்லை?


வரம் தருவது எனக்கில்லை?


வாழ்கை என்பது எனக்கில்லை?


உலகம் என்பது எனக்கில்லை?


இவை அனைத்தும் எனக்கில்லை?


தொடக்கம் முடிவு எனக்கில்லை?


பிறப்பு இறப்பு எனக்கில்லை?


உயர்வு தாழ்வு எனக்கில்லை/


ஒன்று மட்டுமே எனக்குண்டு


இவற்றை வென்றிடும் அஸ்திரம்!, அது?


நம்பிக்கை என்னும் அஸ்திரம்!