பாசக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 7 ஜூலை, 2011
வியாழன், 16 ஜூன், 2011
அப்பாவை நினைத்து பெருமை படுகிறேன் (கவிதை)
நின்றால் திட்டு,நடந்தால் திட்டு
வேலையில் தவறென்றால் அங்கும் திட்டு
எப்பொழுதும் அறிவுரை எத்ற்கும் அறிவுரை
வார்த்தைகளின் மென்மை அறிந்தது
இல்லை நான் அவரிடம் அன்பான
கலந்துரையாடல் இல்லை அவரிடம்
நினைக்க நினைக்க வெறுப்பு
ஏன் இவர் இப்படி இருக்கிறார்
கூர்ந்து கவனித்தேன் நான்
முகத்தில் கடுமை மனத்துள் மென்மை
புறத்தில் கோபம் அகத்தில் அன்பு
வெளிப்புறம் கண்டிப்பு உட்புறம் வருத்தம்
அனைதையும் கொண்டு வெளியில் காட்டாமல்
தன் பிள்ளையின் வெற்றியை பார்த்து
அதில் தன் பங்கில்லை என்று ஒரு
மூன்றாம் மனிதராய் ,ஓரமாய் நின்று
அணு அணுவாய் ரசிக்கும் அப்பாவை
நினைத்து பெருமை படுகிறேன்
வேலையில் தவறென்றால் அங்கும் திட்டு
எப்பொழுதும் அறிவுரை எத்ற்கும் அறிவுரை
வார்த்தைகளின் மென்மை அறிந்தது
இல்லை நான் அவரிடம் அன்பான
கலந்துரையாடல் இல்லை அவரிடம்
நினைக்க நினைக்க வெறுப்பு
ஏன் இவர் இப்படி இருக்கிறார்
கூர்ந்து கவனித்தேன் நான்
முகத்தில் கடுமை மனத்துள் மென்மை
புறத்தில் கோபம் அகத்தில் அன்பு
வெளிப்புறம் கண்டிப்பு உட்புறம் வருத்தம்
அனைதையும் கொண்டு வெளியில் காட்டாமல்
தன் பிள்ளையின் வெற்றியை பார்த்து
அதில் தன் பங்கில்லை என்று ஒரு
மூன்றாம் மனிதராய் ,ஓரமாய் நின்று
அணு அணுவாய் ரசிக்கும் அப்பாவை
நினைத்து பெருமை படுகிறேன்
செவ்வாய், 17 மே, 2011
என் அன்னையே எனக்கு கவிதை!
நாளொரு கவிதை நயமுடன் கவிதை!
கற்பனை கவிதை கலைநயக் கவிதை!
வாழ்த்தும் கவிதை வாழும் கவிதை!
அழகு கவிதை ஆழமான கவிதை!
நீ ஒரு கவிதை உன்னுள் ஒரு கவிதை
தித்திக்கும் கவிதை திகட்டாத கவிதை
இது என் அன்னையின் கவிதை,ஆனால்
என் அன்னையே எனக்கு கவிதை!
ஞாயிறு, 15 மே, 2011
கடவுளின் மீது கோபம் கொண்டேன்
"(ஹைகூ (பாகம் 1))"
நான் ரசிக்கும் கருமை நிறம்
நான் விரும்பும் தனி இடம்
நான் நேசிக்கும் என் பிறப்பிடம்
நான் மீண்டும் வாழ துடிக்கும் இடம்
என் தாயின் கருவறை
கடவுளின் மீது கோபம் கொண்டேன்
சொர்கத்தின் நாட்களை குறைத்ததற்கு
வாழ நினைகிறேன் மீண்டும் அங்கு
வழி ஒன்றும் இல்லை எனக்கு
என் காதில் அசரீரி ஒலித்தது
சொர்கம் கருவறை மட்டுமல்ல
நீ தினமும் வணங்கும் உன்
தாயும்தான் என்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
