காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூலை, 2011

அ காவியம் (காதல் கவிதை)





நினைவிருக்கிறது எனக்கு 
நானும் நீயும் மட்டும் போய்
வந்து கொண்டிருந்த காலம்

திங்கள், 4 ஜூலை, 2011

தேடித் தேடி (கவிதை)

தேடித் தேடி பார்த்தேன் உன்னை இந்த
 கண்ணாடி முன்னால் நான் நின்று
கண்ணாமூச்சி விளையாட்டு போதும்

செவ்வாய், 28 ஜூன், 2011

காதல் கவிதை (பாகம் 9)

நீ வருவாய் என காத்திருந்து
என் கல்லறை கூட கண்ணீர்வடித்தது
முடிவில் நீ வந்தாய் மணக்கோலத்தில்
எனக்கு அஞ்சலி செலுத்த, மலர்வளையத்தை
விட்டுச்சென்றாய் நீ நம் காதலுடன் சேர்த்து,
இபோது மலர்வளையமும் துடிக்கிறது
இருதலைகொள்ளியாய் உன் நினைவுகளுடன்


புதன், 22 ஜூன், 2011

களவு (காதல் கவிதை)



இப்போதுதான் தெரிந்தது களவு
உண்மைதான் களவு போய்விட்டது
திருட்டு விழிகளை நான் கண்டேன்
அது அங்கும் இங்கும் அலைந்தது
என்னை பார்த்து சிரித்தது கபடமில்லாமல்
எனக்கு கோபம் வரவில்லை ஆச்சரியம்
திருட்டு ஆனால் கபடமில்லா சிரிப்பு
என்ன இது புது உலக சரித்திரம்
ஆனால் நான் எதையும் இழக்கவில்லை
அப்படியானால் களவு நடந்ததே
என் மனதுக்கு இன்னமும் புரியவில்லை
எப்படி புரியும் அவள் திருடியது என் மனதை
வைத்து சென்று விட்டால் அவள் மனதை
ஒரு களவு தேவதையாய் என் துடிப்பை இரசிக்க




வியாழன், 2 ஜூன், 2011

எழுதினேன் என் கவிதையை (காதல் கவிதை பாகம் 8)

எழுதினேன் என் கவிதையை


மை இல்லாமல் உனக்காக!


ஏன் அதில் எழுத்து கூட இல்லை!!!


இருந்தும் உனக்கு புரியவில்லை


நான் எழுதியது உன் மனதில்!


ஆம் என்னவளே உன் மனதில்!!!


இன்று உணர்ந்துகொண்டேன்


பெண் மனதின் ஆழம்


பெண்ணுக்கே தெரியாது என்று!!!!!




ஞாயிறு, 29 மே, 2011

காதல் கவிதை (பாகம் 7)



கொஞ்சி விளையாடும் தருணம்

இல்லை தவிக்க விடும் தருணம்
ஆம்
இது தவிக்க விடும் தருணம்

என் மனதை தவிக்க விடும் தருணம்

மறைவாய் உன் கண் சிமிட்டல்

தளர்வாய் உன் புன் சிரிப்பு

கனிவாய் ஒரு சிறு வெட்கம்

அதில் சிவக்கும் உன் பொன் கன்னங்கள்

அழகாய் என்னை கடந்தாய்

ஆழமாய் என்னை சொக்கவைதாய்

 நேசமாய் என் கரம் பிடித்தாய்

   நம் உயிர்துடிப்பான காதலுடன்


வெள்ளி, 27 மே, 2011

காதல் கவிதை (பாகம் 6)





அன்பே உன் கொஞ்சல் விழி என் 

மனதை உயர பறக்க விட்டது

உன் பட்டு கரங்களால்

என்னை வருடினாய்

மறந்தேன்

ஆம் மறந்தேன்

இந்த பொண்ணான தருணத்தை

மீண்டும் இப்பூவுலகில் காண 

உன் கண்களில் தேடினேண்

அவை அன்பு முத்தங்களாய்

கிடைத்தது உன்னிடம்



திங்கள், 23 மே, 2011

காதல் கவிதை (பாகம் 5)


காதல் கவிதை (பாகம் 3 )


காதல் கவிதை (பாகம் 4 )



ஆயிரம் பொற்தாமரை கூடிய அழகு!


இலட்சம் ரோஜாக்கள் சிவந்த அழகு!


கோடி வைரங்கள் ஜொலிக்கும் அழகு!


எண்ணிலடங்கா சூரியங்களின் பிரகாச அழகு!


விண்மீண்கள் அசைக்கும் சிறகின் அழகு!


இவை அணைத்தும் கொண்ட நீ அழகு!


எண்ணவளே நீயே என்றும் பேரழகு!
      

வெள்ளி, 20 மே, 2011

காதல் கவிதை (பாகம் 4)

காதல் கவிதை (பாகம் 3 )


முத்தொளி போல் உன் முகம் அழகு!

வைரொளி போல் உன் வெட்கம் அழகு!

குயிலிசை போல் உன் பாட்டழகு!

உன் விரல் இசைக்கும் கானமழகு!

கருமேகம் போல் உன் குழல் அழகு!

உன் குழலில் சிரிக்கும் ரோஜாவும் அழகு!

ஆகா! உன்னருகில் நானும் அழகு!


காதல் கவிதை (பாகம் 3)

காதல் கவிதை (பாகம் 1)
காதல் கவிதை (பாகம் 2)
காதல் கவிதை (காற்று)


நூறு கவிதைகள் தொகுத்து வைத்தேன்


அழகே உன்னை அழகாக வர்ணிக்க


இருபது கவிதைகள் கந்தலாகின


உன் காந்த கண்களின் ஈர்பைக்கண்டு


நாற்பது கவிதைகள் வெற்றெழுத்தாகின


உன் குழழிசை இனிக்கும் பேச்சைக் கேட்டு


முப்பது கவிதைகள் மறைந்து போயின


உன் நிலவொளி வீசும் புன்னகை கண்டு


மீதி கவிதைகள் உன் அடிமைகள் ஆனன


நீ கொடுத்த அன்பு முத்தத்தில்




வியாழன், 19 மே, 2011

காற்று

நான் வருவேன் (கவிதை)

என்னுயிராய் நீ இருந்தாய்
குருதியில் உயிர் தந்தாய்
முடிவில் காற்றை போல்
என்னயும் நீ ப்ரிந்தாய்
அழகே நீ இல்லத இந்த
உயிர் இப்போது கல்லறையில்




புதன், 18 மே, 2011

காதல் கவிதை (பாகம் 2)

"காதல் கவிதை (பாகம் 1)
"


அழகே அன்று போல் இன்று நீ இல்லை!

நிறைய மாற்றங்கள் உன்னிடம் இன்று !

மிகுந்த குழப்பங்கள் என்னிடம்,ஆனால்?

பிரப்ஞ்சத்தின் அழகு இப்போது உன்னிடம்!

நிறைமாத கர்பிணியாய் நீ ,உன்னையும்

சுமப்பவனாய் நான்,வேண்டுகிறேன் நான்?

மீண்டும் வேண்டும் இந்த நாட்கள்!


செவ்வாய், 17 மே, 2011

காதல் கவிதை (பாகம் 1)

அலைகள் போல் அவள் கூந்தல்

புவியிர்பை மிஞ்சும் அவள் கண்கள்

மலரினும் மெல்லிய இத்ழ்கள்

குழலிசை கொஞ்சும் அவள் குரல்

அழகிய நடனம் அவள் பேச்சு

மயிலிறகின் ஸ்பரிஸம் அவள் தொட்டால்

உலகினை மறந்திடும் மனிதன் நான்