பிற வகை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற வகை கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூலை, 2011

வருவாயா நீ (கவிதை )


தேடினேன் நான் கவியமுதை
இன்று வரை முகமறியவில்லை  
தேடலுக்கு வழி பிறக்கவும் இல்லை 
வானழகின் உச்சம்மாய் மேகத்தின் 
மென் வண்ணமாய் பொழியும் உன்
ஆகாய பூ மழை வரவை காண 
காத்திருக்கிறேன் வருவாயா நீ 

திங்கள், 18 ஜூலை, 2011

இப்படிக்கு உதிர்ந்த மலர் (கவிதை)

இதன் தொடர்ச்சி நானில்லை 
ஆனால் எனக்கும் இதில் பங்குண்டு
என்னாலும் முடியவில்லை இதை 
நிறைவேற்ற என் செய்வேன் நான்
 உனக்கு இங்கு இவ்வுலகில் 

                                                    இப்படிக்கு உதிர்ந்த மலர் 
                                                                               (உதிராத மனதுடன் )

வெள்ளி, 15 ஜூலை, 2011

ஓ இதைத்தான் சொன்னார்களா (கவிதை)

உனக்கென இந்த இடம்
நான் மட்டும் தனியாக
இது என்ன விசித்திரம்
உன்னுள் ஓ இதைத்தான்
சொன்னார்களா காதலென்று

திங்கள், 11 ஜூலை, 2011

உனக்கு இந்த வரிகள் அதிகம்தான் என்ன செய்ய (கவிதை)

ஆனாலும்  உனக்கு இந்த வரிகள்
அதிகம்தான்  என்ன செய்ய 
எனக்கு தெரியவில்லை நாளை 
நான் சொல்கிறேன் உனக்கு 
நீ மட்டும்தான்  அழகு  என்று  





சனி, 2 ஜூலை, 2011

நன்பர்கள் (கவிதை)

வெடக்த்துடன் மறையும் பகலவனின்


வருகைக்கும் விட்டுச் சென்ற சந்தோசத்தின் 

வெள்ளி, 1 ஜூலை, 2011

திங்கள், 27 ஜூன், 2011

அ (கவிதை)

அகிலமெனும் ஆரத்தில் ஆற்றல்
அறிய அவா, ஆனால் அகத்துள்
அளவிட அறியும் அகழவாய்வு
ஆதியும் அந்தமும் அறியவிலா
அணுக்கோடி அனுபவத்தை அளிக்க
அளிக்க அதத்துடனே அறுதியானது
அவ் அறிவெனும் அமைவத்தில்



ஞாயிறு, 26 ஜூன், 2011

வாழ்கை (கவிதை)

வாழ்கை போரட்டத்தில் ஜெயித்தவனின்
பிதற்றல் கூட வேதவாக்கு இல்லயென்றால்
உண்மை நன்னெறி கூட பிதற்றல் இங்கு
வெல்வது என்பதே வாழ்கையென்றால்
வாழ்வென்பது கூட கேலிக்கூத்தா
இல்லையேல் அது ஒரு எடுப்பார்
கைபிள்ளையா ம்,என்னவென்பது
கேள்விகள் உள்ளன விடை இல்லாமல்



தேடினேன் தேடல்களை (கவிதை)

எதையோ சொல்ல வந்தேன்
எதையோ எதையோ சொல்கிறேன்
சிந்தையால் சிந்தை கடினமானது
தேடல்கள் என்னை அலைக்கழித்தன
தேடினேன் தேடல்களை, தேடுவதற்கே
தேடல்கள் தேவைப்பட்டன இறுதியில்
என் தேடல் ஏன் தேடல் என்றானன
தேடல் தேடும்வரை சுகம் ஆனன
தேடாவிட்டாலும் சுபம் ஆனன




சனி, 25 ஜூன், 2011

எங்கே போவேன் (கவிதை)

கடந்து வந்த நினைவலைகள்
கவலையின்றி சொன்னது
நீ என்னை மறந்தாய் என்று
நினைவுக்கு எங்கே போவேன்
வலைவிரித்து பிடிக்க ஐயோ
இந்த சிந்தனை கடலில்


வியாழன், 23 ஜூன், 2011

கற்றுக்கொண்டிருப்பவன் (கவிதை)

கருத்துகளில் இனிமை
எழுத்துக்களில் வளமை
தேடுதலில் புலமை
கற்றுக்கொள்வதில் பொறுமை
எடுத்துரைப்பதில் வலிமை
தட்டிக்கொடுப்பதில் மென்மை
பாராட்டுவதில் வள்ளல்தன்மை
கண்டிப்பதில் நடு நிலைமை
வழிகாட்டுவதில் அனுபவத்தன்மை


இவையணைத்தையும் நான்
கண்டேன் என் சான்றோர்களிடம்
 (இயற்கையின் கொடைகளிடம்)


                                                                இப்படிக்கு


                                                       கற்றுக்கொண்டிருப்பவன்


திங்கள், 20 ஜூன், 2011

ந (கவிதை)

நயமுடன் நாவி நகைபோல்
நன்கைந்து நமதே வென
நாளைய நாவிதழ் என்றுண்டோ
நகைப்பா நல்கி யதென்று




வெள்ளி, 17 ஜூன், 2011

அ (கவிதை)

அகமெனும் அற்றில் அறத்தின்
அறவழி ஆக்கமதல் அணித்தன்
அதனூடே அமைவா தன்னிலை
அவம் அமைந்து விடானிலை
அமைத் துவது அ, அசை தெரிவு

செவ்வாய், 14 ஜூன், 2011

மனம் கவிதை

தனிமையை விரும்பிய மனதை
தனிமையாகவே ஆக்கியது கணினியுகத்தில்
விரும்பியன எல்லாம் கிடைத்தன
ஆனால் அணைத்தும் எந்திர இயக்கங்களாய்
உயிருள்ள மனதை உயிருக்குயிராய்
நேசிக்க துடிக்கிறது மனம் ஆனால்
அணைத்தும் உருமாறின உயிருள்ள
இயந்திர மனங்களாய்

திங்கள், 13 ஜூன், 2011

கவி (கவிதை)

கவியின்ப கனையென்ப மாதகு
மெய்யின்ப வழி நோக் கிலா
அக்த்துளா தவன் அற்றலா
தவப்பய னுடைதம் அரிகண்டு
போற் றவை சிறப்பு







ஞாயிறு, 12 ஜூன், 2011

வ (கவிதை)

வலமிசை வளம், வனம் வரும்
வாரம் அது வரம்,வாகை சூட
வருமுன் வகை வகை வலைச்சரம்
வருவதா வரவேற்பதா வருகையால்
வளர்வலம் வருவதா வருதிசை
வராமல் விடு உம்மை விடு



திங்கள், 6 ஜூன், 2011

புத்துலகு காணுங்கள்




இனி வரவு நீ
இனி செலவு நான்
மையமாய்
என்
மையம்
மாயமாய்
உன்
நிசப்தம்
ஈர்ப்பாய்
உன் வருகை
விலக்கமாய்
என் மனம்
எதிலும்
நீ
அனையாமல்
நான்
  ஒரு நெருப்பாய்
நான்
காற்றாய் நீ
சுடராய் நான்
ஒரு 
அரவனைப்பாய்
நீ
பாவையளனாய்
நீங்கள்
பிறகென்ன
ஒளி
வீசுகிறது
புத்துலகு
காணுங்கள்
மகிழ்ச்சியுடன்



ஞாயிறு, 5 ஜூன், 2011

எண் 3



எண்
34136432165634300.653.630153.0521533.00533.043.01555655633054130633..0.
33..3223.
.0032...152546.
54555121
3
3
3
3
3
3
3
3
3


முடிவில்லாமல் போ
முடிவு வர ஆம் முதல் 3
முடிவு 3 ஆம் முதல் முடிவாய் அமையா அமைவா
நினைவதா நின்று வடிவ எழுத மூவாத மை
முடிவா பிறப்பு இம்மூன் றமைவ
 என்று ஒலிப்ப முடிவ முதலாம்












சனி, 4 ஜூன், 2011

ஒரு குழந்தையாக



இன்றோடு முடிந்தது


தோல்வி இன்றோடு முடிந்தது


ஆம் தோல்வி இன்றோடு முடிந்தது


வெற்றியும் கிடைத்தது


அனைவருக்கும் வெற்றி கிடைத்தது


எழ,விழ,மீள,என பல சலசலப்பு


அனைத்திற்க்கும் முடிவு கிடைத்தது


ஆம் அழ,ஆழ-ஆள,அவல நிலை முடிந்தது


வழ வள பேச்சு வலம் வந்து முடிந்தது


மீண்டும் தொடக்க நிலைக்கு


குழந்தை அழுதது மகிழ்ச்சி மலர்ந்தது


புதிய மாற்றம் புது பரிமாணம்


வா வா கண்ணா வா வா


முடிவின்றி ஒலித்தது அதே அலைகள்


என்ன இது புரியா மாற்றம் என்னுள்


அறிந்தேன் இன்று வந்துள்ளேன்


உலகிற்க்கு ஒரு குழந்தையாக














புதன், 1 ஜூன், 2011

என்னிடம் உள்ளது கவிதை தொகுப்பு


என்னிடம் உள்ளது கவிதை தொகுப்பு

நிறைய நிறைய எழுதினேன்

எழுதிக்கொண்டும் இருக்கிறேன்

ஆனாலும் நிறைய மாற்றங்கள்

எதை எடுப்பது எதை விடுவது

எதை யாரிடம் சொல்வது

எனக்கு பிடித்தவை பல

ஆனால் மற்றவைர்களுக்கு

பிடிப்பதோ அதில் சில

பிடிக்கும் என்று எழுதுகிறேன்

பிடிக்காமல் போகிறது இங்கு

பிடிக்காது என்று நினைப்பேன்

எல்லோருக்கும் பிடிக்கிறது

என்னை அறியா பொக்கிசம்

என்னுள் இருக்கிறது ஆனால்

எது என்று தெரியவில்லை?

முடிந்தால் கதையுங்கள்

முடியாவிட்டால் முயற்சியுங்கள்

ஒரு இனிய விடைதேடலுக்கு.


                                 இப்படிக்கு,
                                    விடை தேடுபவன்.