ஹைகூ கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைகூ கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூன், 2011

இரவு (ஹைகூ கவிதை)



இனிமையாய் மலரும் ஒரு 
கவிதையிரவு நான் செல்கிறேன்
அதை இரசிக்க தூக்கத்தில் கனவாக







வெள்ளி, 17 ஜூன், 2011

ஹைகு கவிதை (பாகம் 3)



பிளாஸ்டிக்கை ஒழிபோம் ஊர்வலம்
கைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்


ஊழலை ஒழிப்போம் மேடைப்பேச்சு
பார்வையாளர்களுக்கு பண பட்டுவாடா


மரங்களை காப்போம் விழிப்புணர்வு செய்திகள்
பிரசுரங்கள் அனைத்தும் மரப்பலகைகளில்


முப்பத்திமூன்று சதம் இட ஒதிக்கீடு
கட்டாய குழந்தை திருமணம்


தெய்வகுத்தம் கருவறைக்கு போகக்கூடாது
இருட்டறையில் பாலியல் லீலைகள்


அழகிய அரிய வனஉயிரின கண்காட்சி
ஓவியங்களில் மட்டும் உயிராய் இருக்கிறது


இந்தியாவின் பலம் இளைஞர்கள்
வேலையில்லா திண்டாட்டம்


என்றும் நாங்கள போரிட மாட்டோம்
அணு ஆயுத பதுக்கல்கள்






















வெள்ளி, 3 ஜூன், 2011

ஹைகூ (பாகம் 2)



நாயின் வால் கூட நிமிர்கிறது
காதலின் வசீகரத்தில் 

மழைத்துளியின் அழுகை வெள்ளமாய் ஓடுகிறது
அழகே நீ அதனை இரசிக்காததால்

 நம்பிக்கையின் வலிமையைக் கண்டேன்
 நத்தையின் தேசிய சாலைக்கடப்பு

உலகத்தை வென்றுவிடுவேன் எப்படி
நான் இன்னும் இழக்கவில்லை நம்பிக்கையை 
கல்லையே தேய்க்கும் எரும்பைக் கண்டு


மன உறுதியின் உச்சம் நாகத்தை
கட்டும் சிலந்தியின் சிலந்திவலை

வெற்றியின் ரகசியம் கண்டேன்
இறக்கும் வரை அயராத உழைப்பு
தோல்வியின் படிக்கட்டுகளில்


இயற்கையின் இரவுக் கவிதை
காரிருளில் மின்மினிப்பூச்சியின் நடனம்






ஞாயிறு, 15 மே, 2011

ஹைகூ (பாகம் 1)

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
  யார் சொன்னது? அறுபதில் கூட வளைகிறதே!
  தாவணிகளை பார்த்தவுடன்!

* புயல் கூட தென்றலாய் வருடுகிறது என்னை
  என்னவளை கண்டவுடன்

* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதா?
  கவி மழை உதவுகிறதே காதலுக்கு!

* கடலுக்கும் வெட்கம் உன்னை கண்டு
  அலைகள் வருவதிலை கடற்கறைக்கு
  அழகே நீ இருப்பதால்

* நிலவுகள் கூடி பிரகாசிக்கின்றன
  என்னவளின் கவிதை சிரிப்பு