பரவசக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரவசக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூலை, 2011

இரவு (கவிதை )

மெல்ல மெல்ல எட்டி பார்க்கும் உன் கருவிழியில்
வண்ணச் சிதறல்களாய் மயக்கும் தாரகங்கள்
நடுவே வெண் மதியின் சுழல் நடனம்
உள்ளத்தை களவு கொள்ளும் தென்றலின் சுவரங்கள்
இவற்றில் மெய் மறந்து துயிலுகிறேன்
இப் பாரின் அன்பான அரவணைப்பில் இன்பமாக 

வியாழன், 14 ஜூலை, 2011

எனக்கும் இது புதுசுதான்

எனக்கும் இது புதுசுதான் என்ன
செய்ய ஆனாலும் சொல்வேன்
இதை கவிதையென்று உன்
கபடமில்லா குழந்தை சிரிப்புக்காக


புதன், 15 ஜூன், 2011

கதை (கவிதை)

கவனத்தில் மறத்துவிட்டேன்
எழுத்துப்பிழையை கவிதை
கதை ஆனது,கதை எழுத
நினைத்தேன் எழுத்துக்கள்
அனைத்தும் கவி ஆனன
தை மட்டும் அழிவதில்லை
என்றும் கவிதை கவி யாவதால்



முழுமதி காண்பேன் கவிதை

முழுமதி காண்பேன் இன்று உன்னுடன் 
நிலவொளி காணும் முழுநிலவொளி 
அந்நிலவொளி முகமலர் வருகை 
வெட்கத்தில் முழுமையாய் உன்னை 
கரைபாய் பின் உன்னை நினைத்து 
ஏங்கும் போது மெதுவாய் நீ 
மீண்டும் வருவாய் என்னுடன் விளையாட 
உனக்காக நான் காத்திருப்பேன் இரவுவரை 
இந்த அழகிய  விளையாட்டை இரசிக்க 

குறிப்பு :(இன்று முழு சந்திர கிரகணம்)



செவ்வாய், 14 ஜூன், 2011

ஜன்னலோரக் கவிதை

அழகாய் இரண்டு சிறிய கதவுகள்
அவளின் சிரிக்கும் கண்கள் போல்
அதில் இருக்கும் வண்ண ஓவியங்கள்
அவள் விழி ஆடும் அழகு நடனம் போல்
ஒன்றாய் பார்த்தால் அவள் மலர்முகம்
தனியாய் பார்த்தால் அவள் வெட்கம்
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
ஜன்னல் திறந்து தென்றல் வந்தது
ஆனாசயமாய் தாவி என் மார்பில் விழுந்தாள்
கன்னத்தில் வருடி மெய் மறந்தாள்
ஆம் அவள்தான் என் பூனைக்குட்டி
என்றும் அவள் என் செல்லக்குட்டி


திங்கள், 13 ஜூன், 2011

குருவி இசை (கவிதை)

அழாகாய் குருவி இசைக்கிறது
காணக் குயிலிசைக்கு நிகராய்
காகம் மெய் மறந்து இரசிக்கிறது
குருவியின் இசை மழை எங்கும் ஒலிக்கிறது
முதன் முதலாய் கேட்கும் புது இசை
தொடருமா இந் நகரத்தில் புதிய இசை
(குருவிகளை காப்போம்)

குறிப்பு :  எனது நகரத்தில் நேற்று நடந்த அருமை நிகழ்வு இது
நேற்று போல் இன்றில்லை வருத்தமே



ஞாயிறு, 12 ஜூன், 2011

ஞாயிறு இனியது

வழமை போல் பகலவன் வருகை
ஆனாலும் இன்று உற்சாக எதிபார்ப்பு
விடிய விடிய கேளிக்கை சற்றுஒய்வு
 பின்பு பகலவனுடன் சேர்ந்து நம்
 உலகம் சுவாசிக்க சுற்றுவது
 தென்றலைப்போல் இங்கும் அங்கும் 
சென்று விளையாட்டாய் ரசிப்பது
 நன்பகளுடன் சேர்ந்து இவ்வுலகை மறப்பது
 காதலி வந்தால் நன்பர்களையே மறப்பது
ஆம் என்றும் இனியது இந்த ஞாயிறு 
என்றும் இனியது இந்த ஞாயிறு 


வெள்ளி, 10 ஜூன், 2011

வண்ணத்துப் பூச்சி



வண்ணமயமாய் வானம் மாறும்


வண்ணங்களாய் என் மனமும் மாறும்


வகை வகையாய் புது முயற்ச்சி


பட்டங்களாய் நான் காணும் காட்சி


ஒன்றினையும் பின்னல்கள் ஒன்றாய்


இணையும் சூட்சமங்களின் அழகு


இவையனத்தும் நான் கண்டேன்


இந்த அழகுப்பறவைகளிடம்








திங்கள், 30 மே, 2011

அதிகாலை


அனைவரும் மயங்கும் அதிகாலை

சில்லென பாயும் இளங்கதிர்

அழகாய் மூழ்கி எழும் இளம்ஜுவாலை

காண எங்கும் இளம் சிவப்பு

மனம் முழுவதும் குதூகலிப்பு

இவைஅனைத்தையும் கண்டு

மெய்மறக்கிறேன்

என் காலோடு விளையாடும் அலைகளுடன்



வியாழன், 26 மே, 2011

குழந்தையின் சிரிப்பில்



இளந்தென்றல் வருடல்


இள நண்டு வருவல்


இமை மூடும் ரசிப்பு


இலை வண்டின் ரீங்காரம்


இசையமுதாய் கடலலைகள்


இனிப்பபான தருணங்கள்


இவையனைத்தையும் ரசித்தேன்


இவ்வுலகையும் மறந்தேன்


இவ்வுலகறியா குழந்தையின் சிரிப்பில்