சனி, 9 ஜூலை, 2011

அ காவியம் (காதல் கவிதை)





நினைவிருக்கிறது எனக்கு 
நானும் நீயும் மட்டும் போய்
வந்து கொண்டிருந்த காலம்

எனக்கு அதிகமாய் தெரியவில்லை
உனக்கும் தான் அதனால் என்ன நம்
புரிதல்களுக்கு அது பாலமாய் 
இருந்தது இனிமையாய் கழிந்த 
அந்த தருணங்கள் இன்றும் என்
மனதில் தென்றலாய் வீசுகிறது

அ என்ற மொழியாய் அ-வையே 
எழுதி எழுதி அதையே பேசி பேசி
சந்தோசமாய் கழித்த தருணங்கள்
சந்தோசத்தின் ஊடலாய் வந்த
உயிருக்குயிராய் நட்பு பின்
காதலாய் கனிந்த பருவ வயது

நடையும் ஓட்டமுமாய் ஓடிய
தருணங்கள் ஆழமாய் ஊன்றிய
நம் வாழ்கை பயணத்தில் 
நீ மட்டும் விடை கொடுத்தாய்
எனக்கு என் மனதில் கலந்து
சென்றாய் சொர்கத்திற்கு

ஆனாலும் நீ தந்த அந்த காதல் 
பரிசு ,அ எழுதிய அந்த ஓர் எழுத்து
காவியம் இன்றும் உன்னை 
என்னுடன் வாழ வைக்கிறது

அன்பு இந்த சங்கலி இன்றல்ல 
என்றும் பிரிக்காது வந்துகொண்டே
இருக்கும் இந்த அ சிலேட்டுக்
காவியத்துடன் என்றும் நம்மோடு




6 கருத்துகள்:

  1. நான் இதில் ரொம்ப வீக்கு. காதல் மற்றும் கவிதை.

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்..! நல்லாத்தான் சொல்றீங்க அனுபவமோ? :-)

    பதிலளிநீக்கு
  3. மழலை மனதில் விருட்சமான காதலின் நினைவுகளை இங்கே கவிதையாக்கியிருக்கிறீங்க. அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  4. அன்பு இந்த சங்கலி இன்றல்ல
    என்றும் பிரிக்காது வந்துகொண்டே
    இருக்கும் //

    அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்