சனி, 11 ஜூன், 2011

கடவுளறிவியல் 2 (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)


குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல்
இருந்தால் மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்

         புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
         புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
         நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
         ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்


 நாம் நமக்குள்ளே எழுப்பும் கேள்வி மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களிடம் இருந்து முரண்பட்டு வாழ்கிறான். தவறு செய்கிறான் (அ) பாவம் செய்கிறான் ஆனால் இன்றுவரை அழிவு மனிதனுக்கு வரவில்லை எனும் போது ஆத்திகத்தில் கடவுள் காப்பார் என்றும்,நாத்திகத்தில் அறிவியல் வழியிலும் விளக்கம் கொடுத்தாலும் முழுவதுமாக இரண்டிலும் தீர்வு இல்லை எனவே விவாதம் பிறக்கிறது

இங்கு என்ன செய்வது ஒன்றும் இல்லை இப்படி பார்ப்போம் நம் கூட இருப்பவர் தனியாக பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம் கேட்டால் அவர் தன் நண்பனிடம் பேசுவதாகவும் அவருடன் உணவருந்துகிறார் , தூங்குகிறார் என்றும் சொன்னால் அதையும் தாண்டி இதோ உங்களிடமும் பேசுகிறார் வணக்கம் சொல்லுங்கள் என்றால் ஆத்திகன்,நாத்திகன் என்று யாராக இருந்தாலும் அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று விலகி ஓடுவோம்

ஆனால் இதயே மதம்,கடவுள்,நாத்திகம் என்று சொன்னால் ஒரு கூட்டம் கூடி விவாதம் அல்லதுசண்டை ஆரம்பிக்கிறோம் மேலே சொன்னது போல இங்கேயும் அதேகூத்துதான் நடக்கிறதுஆனால் அப்படியே தலைகீழாக நடக்கிறது.இதற்கு விடை நாம் நம் படிப்பை,அனுபவத்தை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இவற்றிற்கு சரி. மதம்,கடவுள்,நாத்திகம் இவற்றை பெருமையாக அல்லது தகுதியாக காட்டுவது இல்லையென்றால் அவர்களை வேற்றுகிரக ஜந்துக்களை போல் பார்ப்பது
எதற்கு இந்த முட்டாள்தனம்

தனது சுயலாபத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் மனிதனின் அறிவின்மையையே காட்டுகிறது.எந்த பிரச்சனை என்றாலும் மதம்,கடவுள்,நாத்திகம் இதனுள் கொண்டு வருவது.

நமக்கு சளி பிடிக்கிறது இதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை இதே சளி உயிரை கொல்கிறது என்றால் இங்கே ஆத்திகம்,நாத்திகம் உருவாகும் .ஒரு கிறுமி தன் வாழ்வாதாரதிறக்காக நம்மை கொல்கிறது இதில் என்ன ஆத்திகம்,
நாத்திகம் பேசுவது வேடிக்கையாக உள்ளது


 பிளாக் மாரியம்மன் கோவில் அடடே அப்படியென்றால் பிளேக் கிருமிக்கு வேலை இல்லையா பிளாக் கிருமிக்கு  எங்கே போவது. நான் நாத்திகன் கோவிலுக்குள் போகமாட்டேன் என்பது கடவுள் இல்லையாம் பின்ன என்ன கோவிலுக்குள் போக வேண்டியதுதானே
(சிலர் நாத்திகவாதிகள் என்று இப்படி செய்வதை நான் பார்திருக்கிறேன்) அவர்களை என்ன சொல்வது நாத்திகம் மதம் அல்ல ஒரு விழிபுணர்வு ஆயதமே புரிந்து கொள்ளுங்கள்....

உண்மையை தேடாமல் இப்படி தனக்குள் ஒரு வட்டம் போட்டு ஆத்திகம்,நாத்திகம்
பேசுபவர்களை என்ன செய்வது?????????????????????

உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................





6 கருத்துகள்:

  1. நல்ல பதிவு சகோ. இன்னும் கொஞ்சம் எளிமைப் படுத்தி இருக்கலாம் . நாத்திகம் என்பது இயற்கையாக வாழ்வது --- ஆனால் நாத்திகத்தை ஒரு சடங்கு போல மதம் போல வாழ நினைத்தால் முட்டாள் ஆத்திகர்களுக்கு இவர்களுக்கு வேறுபாடு கிடையாது ...

    குறிப்பாக நான் கடவுள் என்னும் கொள்கையை ஏற்காத போதும் - யாரேன் பிரசாதம் தந்தால் வாங்கிச் சாப்பிடுவேன் .. ரமலான் பிரியாணி தந்தால் மறுப்பதில்லை. ஏனெனில் அது கடவுளாக நான் பார்ப்பதில்லைக் கொடுப்பவரின் அன்பாக பார்க்கின்றேன். அதனை வாங்கிப் புசித்துவிட்டால் கடவுளை ஏற்பதாக அர்த்தமில்லை .. ஏனெனில் கடவுள் என்ற ஒன்று இல்லை என்பது எனக்கு நன்குத் தெரியும் ...

    அப்படி இருக்க அவற்றையெல்லாம் உதாசீனம் செய்து முரண்டுப்பிடிப்பது இல்லை .. ஆனால் அதே சமயம் கடவுளை ஏற்றுக் கொள், என்று கட்டாயப் படுத்தும் போதும், பிரசாதத்தைத் ஏற்காமல் விட்டால் சீக்கு வரும் என அச்சுறுத்தினால் அதை வாங்கி காலில் போட்டு மிதிக்கவும் தயங்க மாட்டேன் .. இங்கு அவர்கள் எனக்கு அன்பாக அதனை தரவில்லை மாறாக திணிக்கப் பார்க்கின்றார்கள். அந்தத் திணிப்பை தான் எதிர்க்கின்றேன் ..

    தொடர்க சகோ .. நல்ல பதிவு முயற்சி .. இன்னும் நிறைய எளிமையான மொழியில் எழுதினால் சுபம் . :)

    பதிலளிநீக்கு
  2. @இக்பால் செல்வன்
    //தொடர்க சகோ .. நல்ல பதிவு முயற்சி .. இன்னும் நிறைய எளிமையான மொழியில் எழுதினால் சுபம்//

    கருத்துக்கு நன்றி சகோ அடுத்த பதிவில் எளிமையை
    பின்பற்றுவேன்

    பதிலளிநீக்கு
  3. @இராஜராஜேஸ்வரி

    //நல்ல பதிவு ..nice write up.//

    thanks

    பதிலளிநீக்கு
  4. ஒரு சிறு திருத்தம்
    "புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல"
    இது இப்படி "புனிதத்தலங்களை ஆக்கும் ஆத்திகனும் அல்ல" என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
    தங்கள் பதிவு நன்றாக இருந்தது.
    நான் இறைவன் இல்லை என்றும் சொல்லமாட்டேன்....அவன் தான் இறைவன் இவன் தான் இறைவன் என்றும் சொல்ல மாட்டேன்....நம்மையும் மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதை மட்டும் அறிவேன்.

    பதிலளிநீக்கு
  5. @R.Puratchimani


    கருத்துக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்