வியாழன், 9 ஜூன், 2011

கடவுளறிவியல் (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)


குறிப்பு : என் கருத்துகள் யாரையேனும் புண்படுத்துவது போல் இருந்தால்   மன்னிக்கவும்....நிறைகுறைகளை தயவுசெய்து
கூறுங்கள் ஏனெனில் நான் உங்களில் ஒருவன்
   
        புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல
        புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல
        நான் உண்மையைத் தேடும் ஒரு சாமானியன் மட்டுமே
       ஆம் நான் உண்மையைத் தேடும் உங்களில் ஒருவன்

இங்கு இருக்கும் கடவுளறிவியல் பற்றி அனைவரும் விவாதிக்கிறார்கள் ஆனால் எதற்க்கா எவை பயன்டுகின்றன,எதற்கு எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதன் உட்கருத்தை யாரும் சொல்வதே இல்லை இதுவே பிரச்சனையின் முதல் படி....

சரி பதிவர்கள் அனைவரும் எதொ ஒரு பக்கம் இருக்கும் குறையை மட்டும் சொல்கிறார்கள் அது எதனால் என எதார்த்ததின் அடிப்படையில் அவைகளை களைந்தால் மட்டுமே கடவுளறிவியல்
பிரச்சனைக்கு ஒரு முடிவை தேடலாம் இல்லையென்றால் மனிதர்களின் நிலை?????????

மக்களின் தன்னபிக்கை இல்லாமையே அதாவது (பயம்+ஆசை) இருப்பது கடவுளறிவியல் பிரச்சனைக்கு காரணம் என மேலோட்டமாக தெரிந்தாலும் முறையான விழிப்புனர்வு இல்லாமையே இதன் காரணம் இன்னும் தெளிவாக கூறினால் மனிதன் மட்டுமே இயற்கையை எதிர்த்து தன்னை அழித்துக் கொண்டு அத்ற்கு வியாக்காணம் கற்பிக்கிறான்........

சரி ஒரு கருத்து உண்மையா?பொய்யா? இரண்டும் இல்லை இடைப்பட்டது என்று மூன்றும் இல்லை என்று கூறுவது மட்டுமே உண்மை இதை உணர்ந்து கொள்வது கடிணமே சரி எப்படி
உணர்வது காற்று நம் கண்களுக்கு சாதரணமாக தெரிவதில்லை ஆனால் அதற்காக காற்றுக்கு நிறம் இல்லை என்று கூறிவிட முடியாது நம் கண்கள் அத்ற்கு ஏற்றவாறு இல்லை என்பதே உண்மை........

சரி காற்றை பார்பது போல் அமைந்தால் மற்றவை இல்லை என்பது போல் அனைத்தும் மறைக்கபடும் இவ்வாறே கடவுளறிவியல் பிரச்சனைக்கும் வருவோம் ஆத்திகம்+நாத்திகம்+அரசியல் வட்டத்தைவிட்டு அல்லது தூக்கி எறிந்து விட்டு இயற்கை அமைத்த வழியில் நம் வாழ்வை தொடர்வோம் இனிமையாக வாழ்வோம்.....


உண்மைக்கான தேடலை தொடர்வோம்.............மீண்டும் சந்திப்போம்................




7 கருத்துகள்:

  1. முதிர்ச்சியான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அப்படியே பாரதி சார் பக்கம் போட்ட கருத்தை இங்கே போட்டதாக நினைச்சுக்கொள்ளுங்களேன். ஹி ஹி.

    அப்படியே உங்கள் பதிவுகளை ஒரு நிரலில் காட்டுமாறு மாற்றுங்களேன். பதிவுகளை தட்டி படிக்க உதவும்.

    பதிலளிநீக்கு
  3. @அனாமிகா துவாரகன்

    கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நண்பரே,
    //புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல//
    எல்லா ஆத்திகர்களும் இதன் படி நடந்தால் பிரச்சினை இல்லையே.
    //புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல//
    எந்த இடமுமே புனிதமோ,தாழ்ந்ததோ இல்லை.இடம் இடம்தான்.
    //இயற்கை அமைத்த வழியில் நம் வாழ்வை தொடர்வோம் இனிமையாக வாழ்வோம்.//
    இதை சொன்னால் நாத்திகம் என்பார்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. //இயற்கை அமைத்த வழியில் நம் வாழ்வை தொடர்வோம் இனிமையாக வாழ்வோம்.....// well said bro .. that is atheism ..

    பதிலளிநீக்கு
  6. @சார்வாகன்
    ////புனிதத்தலங்களை அழிக்கும் ஆத்திகனும் அல்ல//
    எல்லா ஆத்திகர்களும் இதன் படி நடந்தால் பிரச்சினை இல்லையே.//
    எனக்கும் ஆசைதான் ஆனால் நடக்காது

    //
    //புனிதத்தலங்களை வெறுக்கும் நாத்திகனும் அல்ல//
    எந்த இடமுமே புனிதமோ,தாழ்ந்ததோ இல்லை.இடம் இடம்தான்.//

    எனக்கு தெரியும் சகோ ஆனால் எத்தணை பேர் நம்மை போல் சிந்திக்கிறார்கள்,கடவுள் இல்லை என்றால் கோவிலுக்கு போவாயா என்று கேட்பவர்களுக்கு நான் இந்த வரிகளை எழுத வேண்டிய கட்டாயம்,என்னை பல முறை இப்படி என் நன்பர்கள் கேட்டு இருக்கிறார்கள் உங்களுக்கு எப்படி

    //
    //இயற்கை அமைத்த வழியில் நம் வாழ்வை தொடர்வோம் இனிமையாக வாழ்வோம்.//
    இதை சொன்னால் நாத்திகம் என்பார்கள்.
    நன்றி//

    அவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை சகோ
    மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்க்கையோடு தான் வாழ்கின்றன அவையெல்லாம் நாத்திக கொள்கையையா பின்பற்றுகின்றன என்ன வேடிக்கை

    பதிலளிநீக்கு
  7. சகோ கிருபா
    //மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையோடுதான் வாழ்கின்றன. அவையெல்லாம் நாத்திக கொள்கையையா பின்பற்றுகின்றன என்ன வேடிக்கை//

    இதைச் சொன்னால் சிந்திக்கின்ற அறிவு மனிதனுக்கு மட்டும்தான் அதனால் தான் விலங்கினங்களோடு வேறுபடுகின்றோம்,கடவுளை வணங்குவது என்பது தான் ஆறாம் அறிவாம். அதனால் தான் நாம் கேட்கின்றோம் விலங்கினங்கள் எல்லாம் ஒரே சீராக கடவுளை வணங்காதிருக்கும் போது, மனிதன் மட்டும் ஒரே சீரான ஒரே கடவுளை வணங்காமல் வேறுபட்ட கடவுள்களை ஏன் வணங்க வேண்டும்? சரியா சகோ....

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்