வெள்ளி, 17 ஜூன், 2011

ஹைகு கவிதை (பாகம் 3)



பிளாஸ்டிக்கை ஒழிபோம் ஊர்வலம்
கைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்


ஊழலை ஒழிப்போம் மேடைப்பேச்சு
பார்வையாளர்களுக்கு பண பட்டுவாடா


மரங்களை காப்போம் விழிப்புணர்வு செய்திகள்
பிரசுரங்கள் அனைத்தும் மரப்பலகைகளில்


முப்பத்திமூன்று சதம் இட ஒதிக்கீடு
கட்டாய குழந்தை திருமணம்


தெய்வகுத்தம் கருவறைக்கு போகக்கூடாது
இருட்டறையில் பாலியல் லீலைகள்


அழகிய அரிய வனஉயிரின கண்காட்சி
ஓவியங்களில் மட்டும் உயிராய் இருக்கிறது


இந்தியாவின் பலம் இளைஞர்கள்
வேலையில்லா திண்டாட்டம்


என்றும் நாங்கள போரிட மாட்டோம்
அணு ஆயுத பதுக்கல்கள்






















4 கருத்துகள்:

  1. @koodal bala
    //சரியான சாட்டையடி//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  2. //பிளாஸ்டிக்கை ஒழிபோம் ஊர்வலம்
    கைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் //
    ஹி ஹி. என் கையில இருந்த பிளாஸ்டி தண்ணீர் பாட்டிலைப் பார்த்து எழுதலையே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
    டப்பர்வேரையும் கூடாத பிளாஸ்டிக்கில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.


    //மரங்களை காப்போம் விழிப்புணர்வு செய்திகள்
    பிரசுரங்கள் அனைத்தும் மரப்பலகைகளில்//
    அதுவும் கோ கிரீன்னு சொல்லிட்டு கிரீன் கலரில் எல்லாத்தையும் எழுதி ரிசோர்சஸை வீணாக்கும் போது மூஞ்சிலேயே ஒரு குத்துவிடத் தோணும்.


    //தெய்வகுத்தம் கருவரைக்கு போகக்கூடாது
    இருட்டறையில் பாலியல் லீலைகள்//
    சிக்கனிங்.


    //அழகிய அரிய வனஉயிரின கண்காட்சி
    ஓவியங்களில் மட்டும் உயிராய் இருக்கிறது//
    கிளாஸ்.


    ரொம்ப பிடிச்ச இந்த நாலையும் என் மூஞ்சிபுத்தகத்தில் பகிரப் போகிறேன். கண்டிப்பாக உங்க லிங்குடன் தான் =))

    பதிலளிநீக்கு
  3. @அனாமிகா துவாரகன்
    //ரொம்ப பிடிச்ச இந்த நாலையும் என் மூஞ்சிபுத்தகத்தில் பகிரப் போகிறேன். கண்டிப்பாக உங்க லிங்குடன் தான் =))//

    ஹிஹி நான் வேண்டாம்னா சொல்லப்போறேன் சொன்னாலும் கேப்பிங்களா என்ன

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்