வியாழன், 16 ஜூன், 2011

அப்பாவை நினைத்து பெருமை படுகிறேன் (கவிதை)

நின்றால் திட்டு,நடந்தால் திட்டு
வேலையில் தவறென்றால் அங்கும் திட்டு
எப்பொழுதும் அறிவுரை எத்ற்கும் அறிவுரை
வார்த்தைகளின் மென்மை அறிந்தது
இல்லை நான் அவரிடம் அன்பான
கலந்துரையாடல் இல்லை அவரிடம்
நினைக்க நினைக்க வெறுப்பு
ஏன் இவர் இப்படி இருக்கிறார்
கூர்ந்து கவனித்தேன் நான்
முகத்தில் கடுமை மனத்துள் மென்மை
புறத்தில் கோபம் அகத்தில் அன்பு
வெளிப்புறம் கண்டிப்பு உட்புறம் வருத்தம்
அனைதையும் கொண்டு வெளியில் காட்டாமல்
தன் பிள்ளையின் வெற்றியை பார்த்து
அதில் தன் பங்கில்லை என்று ஒரு
மூன்றாம் மனிதராய் ,ஓரமாய் நின்று
அணு அணுவாய் ரசிக்கும் அப்பாவை
நினைத்து பெருமை படுகிறேன்











6 கருத்துகள்:

  1. என்ன சொல்வதென்று தெரியவில்லை சகோ. நல்லக் கவிதை.

    எனக்கும் என் அப்பா நிறைய கண்டிப்பு செய்தார், ஆனால் சுயமாக முடிவெடுக்க அனுமதித் தந்தார். நான் சின்ன வயதில் இருக்கும் போது கண்டிப்பாகவும், அன்பாகவும் இருந்த அப்பா..

    இப்போது அப்படி இல்லை ... அன்பும் இல்லை, கண்டிப்பும் இல்லை, கண்டுக் கொள்வதும் இல்லை, என்னிடமே பொய் சொல்லுகின்றாரோ என்ற உணர்வு எனக்கு இருக்கின்றது..

    தனித் தனி மனிதராக மாறியப் பின் மற்றவர் விடயத்தில் தலையீடு செய்யக் கூடாது என்பதால் நானும் கேட்பதில்லை, அவரும் சொல்வதில்லை. .. வேறு என்ன சொல்ல ?

    அவரவர் பாடு அவரவரோடு அதில் அப்பாக்களும் விதிவிலக்கல்ல..

    பதிலளிநீக்கு
  2. எல்லா அப்பாக்களும் இப்படித்தானா??? அவர்களுக்கு இணையான நபர் உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது..

    இதயும் பாருங்கள்,
    இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011

    http://faaique.blogspot.com/2011/06/normal-0-false-false-false-en-us-x-none.html

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பாசம் சிலிர்க்க வைக்குது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

    பதிலளிநீக்கு
  4. பெண் குழந்தை என்பதால் அப்பாவின் கண்டிப்பு அதிகமில்லை. அப்பாவின் இன்னொரு பக்கத்தை அறிய ஆண் குழந்தையாகப் பிறந்திருக்க வேணுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. இக்பால் செல்வன்,Mohamed Faaique ,அப்பாவி தங்கமணி ,♔ம.தி.சுதா♔,அனாமிகா துவாரகன்

    அனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்