செவ்வாய், 21 ஜூன், 2011

ஒரு கிறுக்கல்கள் (ஹைகு கவிதைகள்)

காத்திருத்தல் என்பதும் கூட காத்திருக்கறது
வெற்றியே நீ வருவாய் என்பதனால்

******
சுற்றும் முற்றும் புல்வெளி அலைகழிக்கிறது
என்னை உன் விரலசைவின் நடன முறையில்


******

வான்வெளி யெங்கும் கண்டேன் உன்னை
அட என்ன வெட்கம் நான் பொய் சொல்கிறேன்


******


நீயும் என்னை கோபிக்கிறாய் ஆம் அதுதான்
அந்த மனம் திருடும் திருட்டு கணகளால் 


******

பலவற்றில் ஒன்றிணைகிறோம் என்பதல்ல காதல்
சிலவற்றில் கூட பிரிவினை இல்லை என்பதே காதல்


******

நானும் நீயும் பயணிப்பது எதனால்
காதல் என்னும் பயணத்தில்


******

வரும் காற்று வருடுவதில்லை 
வாழ்வு என்றும் வாழாதபோது


******

நமக்கு வேண்டும் இந்த பணிகள்
நாளை பிறப்போம் என்ற உண்மையில்


******

கையில் இருப்பது ஒன்றும் இல்லை அடடா
விரல்களின் பயன்களை அறியா மனிதன்


******

வெற்றியின் தேகத்தில் உள்ளது கண்டேன்
தோல்வியின் வீரத் தழும்புகள் வரலாறாய்


******

அவனுக்கு கிடைத்த்து அதிஷ்டம் இதுதான்
உழைப்பின் தன்னம்பிக்கை அளித்த மா மகுடம்


******

எனக்கு மட்டும் ஏன் துன்பம் மனிதனின் 
சாபக்கேடு சிந்திக்கும் ஆறாம் அறிவு


******

கிடைப்பன எல்லாம் அவன் செயல்
அய்யோ இழப்பன இழப்பின் செயல்


******

எனக்கும் புரியவில்லை என் எழுத்து
எனக்கு புரியும் என் எழுத்து எழுதும்போது

******


வலிய வந்தால் வலியுடன் வருவது
வலிமையுடன் வந்தால் வன்மத்துடன் 
வாழ்வது வலிமையே வலியுடையது


******

கற்கும் கல்வி கடமையாக கனிந்தால்
கரம் கடந்து கலகம் கரையும்


******
பால் வென்மை பசுவின் மென்மை
வாழ்க்கையோ என்றும் பசுமை


******

கிறுக்கத் துணிந்த மனிதனின் ஓவியம் 
இன்று காலத்தின் வானவில்லாய்





******


இல்பை இயக்குதல் இணக்கதின்
இடைமறிப்பு இயல்பின் இயக்கத்தில்


******


எண்ணிக்கை எண்ணத்தின் எண்கள்
எண்ணும் என்னமும் என் ணென்பதால்


******














2 கருத்துகள்:

  1. இரண்டு வரிகளை நான் வரிகளாகப் பிரித்து போடுங்களேன். இரண்டு இரண்டு வரிகளாக இருக்கும் போது ஒரே கவிதையோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கவிதைக்கும் கீழே முறி கோடுகளை ---- கூட போடலாம். சின்ன சஜஷ்ஷன்.

    பதிலளிநீக்கு
  2. @ அனாமிகா துவாரகன்
    //
    இரண்டு வரிகளை நான் வரிகளாகப் பிரித்து போடுங்களேன். இரண்டு இரண்டு வரிகளாக இருக்கும் போது ஒரே கவிதையோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கவிதைக்கும் கீழே முறி கோடுகளை ---- கூட போடலாம். சின்ன சஜஷ்ஷன்.///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி செய்துவிட்டேன் உங்கள் விருப்பம்போல்

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்